நடுவழியில் அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

திருச்செந்தூர் அருகே நடுவழியில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி நேற்று மாலை 4.30 மணியளவில் அரசு டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. குரும்பூர் அருகே நல்லூர் ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சர்வீஸ் ரோட்டில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென பேருந்தின் ஸ்டீயரிங் பகுதிக்கு அருகில் இருந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறத் தொடங்கியது. இதனால் பேருந்து ஓட்டுநர் தவசிமுத்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தி, பேருந்தின் இரு தானியங்கி கதவுகளையும் திறந்து பயணிகளை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தினார். ஓட்டுநரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்தவாறு உடனடியாக பேருந்தை விட்டு கீழே இறங்கினர். சில வினாடிகளில், பேருந்தில் தீப்பிடித்து மளமளவென கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது. மின் கசிவு காரணமாக இந்தப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர்ஷ்டவசமாக, ஓட்டுநரின் சமயோசித செயலால் பயணிகள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version