தங்கம், வெள்ளி விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது. அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியான சில மணிநேரங்களிலேயே, ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ. 2,200 வரை அதிகரித்தது. இது நகை வாங்க திட்டமிட்டிருந்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அடுத்த நாளும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,280 அதிகரித்தது. இன்னும் சில நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்துக்குள் வந்துவிடும் என எதிர்பார்த்த நிலையில், அடுத்த நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 5,240 என்ற அளவில் விலை உயர்ந்தது.

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டிய நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு சரியத் தொடங்கியது. இதன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை தற்காலிகமாக வலுப்பெற்று, திடீரென உயர்ந்தது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 245 குறைந்து ரூ. 13,140-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,960 குறைந்து ரூ. 1,05,120-க்கும் விற்பனையானது. ஆனால் இன்று, கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 13,160-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 1,05,280-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையை விட வெள்ளி விலை உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 45 உயர்ந்து ரூ. 250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 45,000 உயர்ந்து, தற்போது ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version