தங்கம் விலை திடீர் உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை திடீர் உயர்வு

கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தினந்தோறும் மாறிக்கொண்டே வருகிறது. உலகப் பொருளாதாரத்தில் ஈரான் – அமெரிக்க போர் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைதல், வேலையின்மை, பொருளாதார நிலையற்ற தன்மை போன்ற காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை மாற வேண்டுமானால், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றும், அவ்வாறு உயர்த்தப்பட்டால் உலகளவில் தங்கத்தின் விலை குறையும் என்றும் நிபுணர்கள் கணித்திருந்தனர். இதற்கிடையே, அமெரிக்க ஃபெடரல் வங்கி நேற்று வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி, வட்டி விகிதத்தை 3.75% முதல் 4% ஆக நிர்ணயித்துள்ளது.

இதனால் இனிமேல் தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.130 உயர்ந்து ரூ.14,285க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை உயர்வு நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version