84 வயது ‘ஜெம்’ வீரமணி மீது 7-வது வழக்குப்பதிவு!

84 வயது தொழில் அதிபர் 'ஜெம்' வீரமணி

84 வயதான தொழில் அதிபர் 'ஜெம்' வீரமணி, சிறுமிகளை சீரழித்த குற்றச்சாட்டில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி என்ற பெண் மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரமணி சிறுமிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை வைத்திருந்தும், அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத அவரது முன்னாள் உதவியாளர் கணேசன், மேலும் சிறுமிகளை அழைத்து வந்த டிரைவர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோரும் அடுத்தடுத்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

சமீபத்தில், ஜெம் வீரமணியிடம் 200 கேள்விகள் கேட்டு, 14 மணி நேரம் போலீஸ் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு குழுவினருக்கு, விசாரணையின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் அதிகாரப்பூர்வமாக செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிறப்புப் புலனாய்வு குழுவினர் வழக்கின் ஒவ்வொரு நகர்வு குறித்தும் வாரந்தோறும் செய்திக்குறிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 7-வதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தி வீட்டில் சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அவரது வீடு, கானத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு, மற்றும் அவர் நடத்தி வரும் சாமுண்டீஸ்வரி நேச்சுரல் கிரானைட் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் வழக்குகள் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணையில், ஜெம் வீரமணிக்கு அவர் நடத்தி வரும் 'ஜெம்' கிரானைட் நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் உதவியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சக்திவேலிடம், வீரமணி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு மேற்கொண்ட பணப்பரிமாற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்ட 11 சிறுமிகள் குறித்த புகார்களின் பேரில் வீரமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சிறப்புப் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version