அக்டோபர் 1 முதல் கேஸ் மானியம் கட்? ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயம்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய விதிமுறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. தகுதியான வீடுகளுக்கு மட்டுமே மானிய விலையில் சிலிண்டர்கள் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

தற்போது சந்தை விலையில் சுமார் ₹950-க்கு விற்கப்படும் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு, பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. இருப்பினும், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கேஸ் இணைப்புகளைப் பெற்று, கூடுதல் மானியங்களைப் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைக் கட்டுப்படுத்தவே மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பலமுறை காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டது. இந்த நீட்டிப்பின் பயனாக, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி நிலவரப்படி, 27.43 கோடி வீட்டு உபயோக நுகர்வோரில் 89.9 சதவீதம் பேர் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை முடித்துள்ளனர். மீதமுள்ள 10 சதவீதத்தினருக்கு, அக்டோபர் 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஏற்கனவே பயோமெட்ரிக் சரிபார்ப்பை வெற்றிகரமாக முடித்திருந்தால், மீண்டும் செய்யத் தேவையில்லை. உங்கள் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுகள் வழக்கம் போல் தொடரும். ஆனால், அக்டோபர் 1ஆம் தேதிக்குள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்காத எரிவாயு நுகர்வோருக்கு மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது என மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனால், மானிய விலையில் 14.2 கிலோ சிலிண்டர்களைப் பெற முடியாது. அதற்குப் பதிலாக, சந்தை விலையிலேயே சிலிண்டர்களை வாங்க வேண்டியிருக்கும் அல்லது 5 கிலோ அல்லது 10 கிலோ போன்ற சிறிய சிலிண்டர்களை மட்டுமே பெற முடியும். இருப்பினும், உங்கள் கேஸ் இணைப்பு ரத்து செய்யப்படாது, மானியம் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இ-கேஒய்சி-யை (e-KYC) உங்கள் கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு ஆதார் கார்டு மற்றும் கேஸ் புத்தகத்துடன் சென்று, விரல் ரேகை (Biometric) மூலம் சரிபார்க்கலாம். மேலும், சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர்களிடமும் இதற்கான மொபைல் செயலி இருப்பதால், அவர்கள் மூலமும் உங்கள் வீட்டிலேயே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கலாம்.

ஆன்லைன் மூலமாகவும் இ-கேஒய்சி செய்ய முடியும். கேஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் (உதாரணமாக: IndianOil One app) வழியாக 'Face Authentication' (முக அங்கீகாரம்) வசதியைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே இதைச் செய்து முடிக்கலாம். மேலும், எல்பிஜி சேவைகள் தொடர்பான உதவிகளுக்கு, 1800 2333 555 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை நுகர்வோர் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version