சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை: ஆக்ராவில் அதிர்ச்சி

ஆக்ராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர்.

ஆக்ராவில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொண்ட 24 வயதுப் பெண், தனது சொந்தத் தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெய்த்பூர் பகுதியைச் சேர்ந்த அங்கிதா, ராணுவ வீரர் அமித் பச்சௌரி என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, ராணுவ வீரர் அமித் தனது பணிக்குத் திரும்பிய நிலையில், அங்கிதா தனது பெற்றோருடனேயே வசித்து வந்துள்ளார். ஆனால், அங்கிதாவின் பெற்றோருக்கு இந்தத் திருமணத்தில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அங்கிதாவின் தந்தை விமல் ஷர்மா, ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மகள் அங்கிதாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர், ஒரு துணியால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 112 என்ற எண்ணில் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கிதா பலத்த காயங்களுடன் தரையில் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக, தந்தையான விமல் ஷர்மாவைக் கைது செய்த காவல்துறையினர், அங்கிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version