மனைவிக்கு பயந்து மண்ணில் புதைத்த ரூ.5 லட்சம்: கறையான் அரித்ததால் அதிர்ச்சி

கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளைக் காட்டும் விவசாயி மங்கிலால் மேக்வால்

தனது மனைவிக்குத் தெரியாமல் ரூ.5 லட்சத்தை நிலத்தில் புதைத்து வைத்த விவசாயி, பணத்தை தேடி ஓராண்டு அலைந்து, இறுதியில் கறையான் அரித்த நிலையில் கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த மங்கிலால் மேக்வால் என்ற விவசாயி, கடந்த ஆண்டு தனது நிலத்தை ரூ.5 லட்சத்திற்கு விற்றுள்ளார். இந்த பணத்தை வைத்து தனது நிலத்தில் ஒரு அறை கட்ட திட்டமிட்டுள்ளார். ஆனால், தனது மனைவிக்குத் தெரியாமல் பணத்தை பாதுகாப்பாக வைக்க நினைத்த அவர், பணத்தை பாலித்தின் கவரில் போட்டு, தனது விவசாய நிலத்தில் குழி தோண்டி மண்ணில் புதைத்து வைத்துள்ளார்.

மங்கிலாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், பணத்தை புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்துவிட்டார். பின்னர், அறை கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டபோது, தனது விவசாய நிலத்தில் நீண்ட நாட்களாக பணத்தை தேடி வந்துள்ளார். சுமார் 6 ஏக்கர் நிலத்தை தோண்டி பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. நாளடைவில், இந்த விஷயத்தை தனது மனைவி மற்றும் மகனிடம் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இதனை நம்பாத அவர்கள், பிறகு மங்கிலாலுடன் சேர்ந்து பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்படியே ஓராண்டு கடந்து விட்டது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும் விதமாக, டிராக்டரை வைத்து நிலத்தை உழுதுள்ளனர். அப்போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் அவர்களின் கண்களில் பட்டுள்ளது. அந்தப் பணத்தை கண்டெடுத்தபோது, அதில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கறையானால் அரித்து சேதமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ந்து போயினர்.

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை பச்பத்ராவில் உள்ள வங்கிக்கு கொண்டு சென்று மாற்றுவதற்கு முயன்றபோது, வங்கி நிர்வாகம் அவற்றை மாற்ற மறுத்துவிட்டது. அதற்கு பதிலாக, ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இந்தப் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில், மங்கிலால் குடும்பம் மிகுந்த மன உளைச்சலில் தவித்து வருகிறது.

இதற்கிடையே, கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்து மங்கிலால் கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது. இந்த சம்பவம், பணத்தை பாதுகாப்பாக வைப்பதில் உள்ள சிக்கல்களையும், எதிர்பாராத விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version