70 படங்களில் நடித்தும் தேசிய விருது இல்லையே.. அரசியலா பாஸ் பண்ணுவீங்க?- இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மற்றும் தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். "70 படங்கள் நடித்தும் கூட ஒரு தேசிய விருது வாங்க முடியவில்லை, அங்கேயே உங்களால் பாஸ் பண்ண முடியவில்லை. அப்படியிருக்கும்போது, இங்கு அரசியலில் எப்படி பாஸ் பண்ணப் போகிறீர்கள்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல், முதல்வர் ஓடோடி விமானத்தில் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டார். தவெக கூட்டத்திற்கு வந்தவர்களையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எப்படி மக்களை காப்பாற்றுவார்கள்?" என்று விமர்சித்தார்.

மேலும், "நூறு விஜய் வந்தாலும், எடப்பாடி தொகுதியில் ஒன்றும் செய்ய முடியாது. முதலமைச்சர் கூறியது போல அவரது உத்தரவால் வீரமணி கைது செய்யப்படவில்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அவர் பொய் கூறியுள்ளார்" என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், விஜய் தேர்தல் பிரசாரம் செய்த பின்னரும் எடப்பாடி தொகுதியில் தான் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார். சட்டமன்றம் பட்டிமன்றமாக மாறிவிட்டதாகவும், தவெக ஏதோ ஒரு விபத்தில் ஆட்சி அமைத்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தவெகவினர் 'எம்எல்ஏ'க்களை பிள்ளை பிடிப்பது போல் பிடிக்கிறார்கள் என்றும், 'ஜனநாயகன்' படம் ஒரு வாரம்கூட ஓடவில்லை என்றும், அப்படிப்பட்ட தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும், இது நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version