மின்கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தல் – ராமதாஸ்

மின்கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொதுமக்கள் மற்றும் தொழில் துறையை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்கட்டண உயர்வு குறித்த மக்களின் கவலையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version