முட்டை, கேரட், தேன்: ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்!

முட்டை, கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. குறிப்பாக, வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல் கேரட் சாற்றை அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கேரட்டை பச்சையாக சாப்பிடுவது அதன் முழுமையான சத்துக்களைப் பெற சிறந்த வழியாகும். பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி பச்சைக் கேரட்டை மென்று சாப்பிடுவதன் மூலம் பற்களின் கரைகளை அகற்ற முடியும். சமைக்கும்போது கேரட்டில் உள்ள பெரும்பாலான சத்துக்கள் வீணாகிவிடுகின்றன. ஆனால், பச்சையாக சாப்பிடும்போது வைட்டமின் ‘ஏ’ போன்ற சத்துக்கள் முழுமையாக உடலுக்குக் கிடைக்கின்றன.

வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த கேரட், ஆரோக்கியமான கண் பார்வைக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானதாகும். தினமும் பச்சைக் கேரட்டை உணவில் சேர்த்து வந்தால் கண் பார்வை கூர்மையடையும். மேலும், இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் திறனையும் கொண்டுள்ளது.

வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டால் ஏற்படும் மாலைக்கண் நோயைக் குணப்படுத்த கேரட் உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுத்து, பொலிவான தோற்றத்தை அளிப்பதிலும் கேரட் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் கேரட் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்த விருத்திக்கும் உதவுகிறது.

மேலும், குடல் புண்கள் ஏற்படாமல் தடுக்கவும் கேரட் உதவுகிறது. பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கேரட் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பித்த கோளாறுகள் சரியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version