டெல்லியில் பதற்றம்: 5 மெட்ரோ நிலையங்கள் மூடல், ஜனாதிபதி மாளிகை வாயில் அடைப்பு

டெல்லியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட மெட்ரோ நிலையம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுடெல்லி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரைத் தவிர மற்ற இடங்களில் போராட்டம், பேரணிகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, டெல்லி மெட்ரோவின் ஐந்து முக்கிய நிலையங்கள் இன்று மூடப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ சேவையை நம்பியிருந்த பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கரப்பான் பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த முயன்றனர். ஆனால், அவர்களுக்கு டெல்லி காவல்துறை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. தடை உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்திருந்தது.

இருப்பினும், ஒரு பகுதியினர் எப்படியோ நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்தனர். மேலும், அவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி செல்லக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனாதிபதி மாளிகையின் வாயிற்கதவுகள் அடைக்கப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் நுழைய முயன்றவர்களை நோக்கி துணை ராணுவப் படையினர் துப்பாக்கிகளுடன் முன்னேறியதால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

முன்னதாக, நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில்கள் சிறிது நேரம் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த திடீர் நிகழ்வுகளால் டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version