சந்தை வீழ்ச்சியில் லாபம்: புதிய முதலீட்டு உத்தி!

பங்குச் சந்தை வீழ்ச்சியில் லாபம் ஈட்டும் உத்திகள்.

கூட்டத்தின் போக்கிற்கு எதிராக பயணிப்பது என்பது எப்போதுமே சவாலானது. ஆனால், பங்குச் சந்தையில், மற்றவர்கள் அச்சத்தில் பின்வாங்கும் துறைகளில் துணிச்சலாக முதலீடு செய்வதே 'கான்ட்ராரியன் முதலீடு' எனப்படுகிறது. சந்தையின் தற்காலிகப் பதற்றத்தைப் பயன்படுத்தி, நீண்டகால அடிப்படையில் அதிக லாபம் ஈட்ட விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

பங்குச் சந்தை எப்போதும் அனைத்துப் பங்குகளுக்கும் சரியான விலையை நிர்ணயிப்பதில்லை. சில சமயங்களில், ஒரு குறிப்பிட்ட துறை அல்லது நிறுவனம் பின்னடைவைச் சந்திக்கும்போது, அதன் உண்மையான மதிப்பை விட விலை வெகுவாகக் குறைகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள், வட்டி உயர்வு, அரசு விதிமுறைகள், திடீர் வரிகள், நிறுவனத்தின் வருவாய் குறைதல் போன்ற காரணங்களால் இத்தகைய சூழல் ஏற்படலாம். இந்த நிலையை அடையாளம் காண்பதே கான்ட்ராரியன் முதலீட்டாளர்களின் முக்கியப் பணியாகும்.

பெரும்பாலான முதலீட்டாளர்கள் சமீபத்திய கசப்பான அனுபவங்களை மட்டுமே மனதில் கொண்டு, அந்த நிலை தொடரும் என்ற அச்சத்தில் பங்குகளை விற்கத் துவங்குவார்கள். ஆனால், திறமையான கான்ட்ராரியன் முதலீட்டாளர், நிறுவனத்தின் தற்காலிகப் பிரச்சனையை அதன் நிரந்தர வீழ்ச்சியிலிருந்து வேறுபடுத்திப் பார்த்து, உண்மையான வாய்ப்புகளைக் கண்டறிவார். இதுவே அவர்களின் தனித்துவமான அணுகுமுறையாகும்.

கான்ட்ராரியன் உத்தியில் மிகப்பெரிய முதலீடு 'பொறுமை' ஆகும். சந்தைப் போக்குக்கு எதிராக நீங்கள் முதலீடு செய்யும்போது, அது சாதகமாக மாற சில ஆண்டுகள் கூட ஆகலாம். ஆரம்பத்தில் உங்கள் முதலீட்டு முடிவு தவறோ என்று தோன்றலாம். அந்த அளவுக்குப் பங்கின் விலை மேலும் குறையக்கூடும். ஆனால், பொருளாதாரச் சுழற்சி தலைகீழாக மாறி, பிற முதலீட்டாளர்கள் மீண்டும் அந்தப் பங்குகளை நோக்கி வரும்போது, அதற்கான முழுமையான பலனும், பல மடங்கு லாபமும் கிடைக்கும்.

நீண்ட கால முதலீட்டு நோக்கம் கொண்டவர்களுக்கும், சந்தையின் தற்காலிகப் பயத்தை விட நிறுவனத்தின் அடிப்படை வலிமையை நம்புபவர்களுக்கும் 'ஐசிஐசிஐ புருடென்ஷியல் கான்ட்ரா ஃபண்ட்' (ICICI Prudential Contra Fund) மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இந்த ஃபண்டின் என்எப்ஓ (NFO) செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12 வரை திறந்திருக்கும்.

இந்தத் திட்டம், பங்குகளின் மதிப்பு, கடன் அளவு, நிறுவன உரிமை, எதிர்கால வளர்ச்சி சாத்தியம் மற்றும் மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, சந்தைப் போக்கில் மாற்றம் ஏற்படும்போது அதிகபட்ச லாபத்தை ஈட்ட வழிவகுக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய வாய்ப்பை வழங்குகிறது.

இந்தக் கருத்துக்களை ஜி. மாரிமுத்து, நிர்வாக இயக்குநர், எம்எம் ஃபின்சர்வ்கூறியுள்ளார். கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் இந்த பிராண்டின் முழு பொறுப்பாகும்.

Author

Deepaksanth S

MDTV24x7 News-இன் ஆசிரியர் (Editor) மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் (Technology Advisor) ஆவார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட்போன்கள், கேஜெட்கள் மற்றும் டிஜிட்டல் உலகின் சமீபத்திய அப்டேட்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும், கோலிவுட் சினிமாவின் புதிய திரைப்படங்கள், நடிகர்-நடிகைகள், திரைப்பட அறிவிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் தொடர்பான தகவல்களையும் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார். துல்லியமான, நம்பகமான மற்றும் தரமான செய்திகளை எளிய தமிழில் வழங்குவதே இவரின் நோக்கமாகும்.

Share This Article
Follow:
MDTV24x7 News-இன் ஆசிரியர் (Editor) மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் (Technology Advisor) ஆவார். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட்போன்கள், கேஜெட்கள் மற்றும் டிஜிட்டல் உலகின் சமீபத்திய அப்டேட்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும், கோலிவுட் சினிமாவின் புதிய திரைப்படங்கள், நடிகர்-நடிகைகள், திரைப்பட அறிவிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் தொடர்பான தகவல்களையும் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார். துல்லியமான, நம்பகமான மற்றும் தரமான செய்திகளை எளிய தமிழில் வழங்குவதே இவரின் நோக்கமாகும்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version