ஆதாரங்களுடன் தயாராக உள்ளோம் – முதல்வர் விஜய் எச்சரிக்கை

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய்

‘அதை வெளிப்படையாக வெளியிட வேண்டாம் என நினைத்தேன். ஆனால், ஆதாரங்கள் கேட்கப்படுவதால், அதை வெளிப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எப்போது, எதை வெளியிட வேண்டுமோ, அப்போது வெளியிடப்படும்’ என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர், “அமைச்சர்கள் எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும், அதற்கான ஆதாரங்களைக் கேட்கிறார்கள். நிதியமைச்சர் மூன்று துறைகளின் தணிக்கை அறிக்கைகள் எனது மேஜையில்தான் உள்ளன. இதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், ஆதாரங்கள்.. ஆதாரங்கள் என்று கேட்கிறார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பு, நிதியமைச்சர் மூன்று துறைகளை ஆராய்ந்து, அதன் கோப்புகள் எனது மேசையில் இருப்பதாகக் கூறினார். அவர் அதை சாதாரணமாகச் சொல்லவில்லை. அவை உண்மையில் எனது மேசையில்தான் உள்ளன. அத்தனையும் ஆதாரங்களுடன் உள்ளன. அதை வெளிப்படையாக வெளியிட வேண்டாம். எதை எப்போது வெளியிட வேண்டுமோ, அது அப்போது வெளியிடப்படும். மக்கள் நம்மிடம் என்ன, எப்போது, எப்படிப் பேச வேண்டும் என்பதை எல்லாம் பேசிவிட்டுத்தான், அவர்கள் எங்களை ஆசையாக இங்கு கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்கள்.

நான் பேசுவேன். பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இடைத்தேர்தலையாவது சிலருக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டுமல்லவா!” என்று அவர் குறிப்பிட்டார். முதல்வரின் இந்தப் பேச்சு, சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version