சுவிட்சர்லாந்து செல்கிறார் முதலமைச்சர் விஜய்: உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்பு!

முதலமைச்சர் விஜய் சுவிட்சர்லாந்து பயணம்

தமிழக முதலமைச்சர் விஜய், வரும் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு ஜனவரி 18 முதல் 20 வரை நடைபெறுகிறது.

உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் அலோயிஸ் விடுத்த அழைப்பை ஏற்று, முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய மாநாட்டில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின்போது, சுமார் ரூ. 15,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மேலும் பல புதிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவரும் முயற்சியில், முதலமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அரசுகளின் பிரதிநிதிகள், 1,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் என பல்துறை வல்லுநர்கள் கலந்துகொள்கின்றனர்.

கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்ற கூட்டங்களில் அப்போதைய திமுக அரசின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்க்கு உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்விங்கி மற்றும் இயக்குநர் கைரூஸ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்ற வருடாந்திரக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் 2027 ஆம் ஆண்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என நம்பப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version