போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தான்: முதலமைச்சர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘start run, stop drugs’ என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

மாரத்தானை தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுடன் மக்களாக இணைந்து முதலமைச்சரும் ஓட்டத்தில் பங்கேற்றார். இது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் உடன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என். ஆனந்த், நிதியமைச்சர் மரிய வில்சன், உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் ஆகியோரும் கலந்துகொண்டு ஓடினர்.

போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முதலமைச்சரின் நேரடி பங்கேற்பு, இந்த நிகழ்விற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version