முதலமைச்சர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீவஸ்தவ, சென்னை முதன்மை மண்டல மேலாளர் ராஜசேகரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதேபோல், சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் ஜி.மகாலிங்கம், மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் ஆர்.விஜய் ஆனந்த் ஆகியோரும் முதல்வரை சந்தித்தனர். மேலும், கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பி.ரமேஷ்பாபு, செயல் இயக்குநர் பி.சங்கர், இணை பொது மேலாளர் மற்றும் மண்டல தலைமை அலுவலர் என்.சக்கரவர்த்தி ஆகியோரும் முதல்வரை தனித்தனியாக சந்தித்தனர்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சலீ எஸ்.நாயர், செயல் இயக்குநர் எம்டி.வின்சென்ட், செயல் துணைத் தலைவர் பி.ஆர்.அசோக்குமார், சென்னை மண்டல மேலாளர் வெங்கடேசன் ஆகியோரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

இறுதியாக, பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை – தலைமைப் பொது மேலாளர் விவேகானந்த் செளபே, பொது மேலாளர்கள் எம்.வி.ஆர்.முரளி கிருஷ்ணா, ரவிக்குமார் ஆகியோரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை சந்தித்து, வங்கி சார்ந்த தேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்கள்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version