முதலமைச்சர் விஜய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரிடம் நேரில் வாழ்த்து பெற்றார்

தமிழக வெற்றிக்கழகத் தலைவரான விஜய், கடந்த நேற்று முன்தினம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, நேற்று அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய தலைவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் விஜய் அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெறுவது அரசியல் நாகரிகம் என்று பல தலைவர்களும் பாராட்டினர்.

இந்தச் சூழலில், இன்றும் முதலமைச்சர் விஜய் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, முதலில் சென்னை மண்ணடியில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவரை அக்கட்சியின் நிர்வாகிகள் அலுவலக வாசலில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீனைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனுக்கும், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்துக்கும் முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version