மதுரை வருகை தரும் முதல்வர் விஜய்: மீனாட்சி அம்மன் தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக முதல்வர் விஜய், முதல்முறையாக மதுரை மாநகருக்கு இன்று வருகை தருகிறார். தனி விமானம் மூலம் காலை 11:00 மணிக்கு மதுரை வந்தடையும் அவரை, கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்க விமான நிலைய சாலைகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திறந்தவெளி காரில் நின்றபடி தொண்டர்களின் வரவேற்பை முதல்வர் ஏற்றுக்கொள்கிறார்.

தொடர்ந்து, ரிங் ரோடு வழியாக மதுரை அரசு மருத்துவமனைக்குச் செல்லும் அவர், அங்கு 'தாய்மாமன் தங்கமோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், மதியம் ஒரு மணியளவில் சுமார் ரூ.10.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மதிய உணவுக்காக சர்க்கியூட் ஹவுஸ் செல்கிறார்.

அரசு அலுவலகங்களுக்கு திடீர் 'விசிட்' செல்ல வாய்ப்புள்ளதால், அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஓய்வுக்குப் பிறகு, மாலை 4:00 மணிக்கு புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு முதல்வர் விஜய் செல்கிறார். அங்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படும்.

முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி, மதியம் முதல் அவர் புறப்படும் வரை கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும். பொதுவாக, அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த முதல்வர் விஜய்யிடம், கோயிலின் நடைமுறைகளின்படி உறுதிமொழி கடிதம் பெறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கோயில் தரப்பில் கேட்டபோது, 'மாற்று மதத்தினர் உறுதிமொழி எழுதிக்கொடுத்துவிட்டு தரிசனம் செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதல்வரிடம் 'இந்து மதத்தின் மீது நம்பிக்கை உண்டு' என உறுதிமொழி எழுதி வாங்கப்படும் அல்லது அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து பெறப்படும்' என்று விளக்கமளித்தனர்.

அதே சமயம், மீனாட்சி கோயிலுக்கு முதல்வர் விஜய்யின் வருகை அவரது தனிப்பட்ட முடிவு என்றும், இதுவரை மதுரையில் அரசு மருத்துவமனை மற்றும் காந்தி அருங்காட்சியக நிகழ்ச்சிகள் மட்டுமே அவரது பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தனது நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பிறகு, மாலை 5:00 மணிக்கு முதல்வர் விஜய் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்த திடீர் வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version