முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம் திடீர் ரத்து: காரணம் என்ன?

முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம் ரத்து செய்யப்பட்டது

காவிரி மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கர்நாடகாவுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி மேற்கொள்ளவிருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் ரத்துக்கான காரணங்கள் தற்போது விரிவாக விவாதிக்கப்படுகின்றன.

முன்னதாக, ஆகஸ்ட் 3 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கர்நாடகா செல்ல முதலமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார். இதற்காக கர்நாடக அரசும் முழுமையான முன்னேற்பாடுகளை செய்திருந்தது. குறிப்பாக, முதலமைச்சருடன் என்ன பேச வேண்டும், காவிரி வழக்கு குறித்து எப்படி விளக்கம் அளிப்பது, நீர்நிலைகளில் உள்ள நீரின் இருப்பு, கடந்த காலங்களில் திறக்கப்பட்ட நீர் ஏன் தற்போது திறக்கப்படவில்லை என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க அதிகாரிகள் தயாராக இருந்தனர். நீர்வளம் மற்றும் சட்டத்துறை சார்பில் இதற்காக சிறப்பு அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள், முதலமைச்சர் விஜயின் வருகையை தற்போதைக்கு தவிர்க்கலாம் என்ற முடிவுக்கு தள்ளியதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களிடம் இது குறித்து பேசியபோது, முதலமைச்சர் விஜயின் வருகை கர்நாடக அரசுக்கு ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், கர்நாடகாவில் உள்ள பிற அணைகளிலும் காலவரையற்ற போராட்டங்களை நடத்த பாஜக ஆதரவு விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. முதலமைச்சர் விஜயின் வருகையின் போது, இந்த போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் நிலவியது.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திலும், முதலமைச்சர் விஜய் வந்தால் என்ன பேசுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டபோது, இது கர்நாடக அரசுக்கு மேலும் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என பிற கட்சி எம்.பி.க்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, இன்று காலை டி.கே. சிவக்குமார் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜயின் வருகையின் போது எல்லையில் பதற்றம் ஏற்படலாம் என்றும், விவசாயிகள் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்றும், இதனால் கர்நாடகாவின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் டி.கே. சிவக்குமாரிடம் தெரிவித்தனர். ஏற்கனவே 'ஜனநாயகன்' திரைப்பட திரையிடல் தொடர்பாக பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் வந்தால் எதிர்ப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், எனவே அவரது வருகையை தவிர்ப்பதே சிறந்த ஆலோசனை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாற்றாக, காணொளி மூலம் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தலாம் என்றும், அதில் 'கர்நாடகா-தமிழ்நாடு' மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களையும் அழைக்கலாம் என்றும் அதிகாரிகள் பரிந்துரைத்தனர். கர்நாடக உள்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்கள், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியில், தற்போதைக்கு முதலமைச்சர் விஜயின் வருகையை தவிர்க்க வேண்டும் என டி.கே. சிவக்குமார் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பு இந்த விவகாரத்தில் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாலேயே, கர்நாடக அரசு நீதிமன்றம் மற்றும் பிரதமரிடம் முறையிடும் பாதையில் நகர தொடங்கியுள்ளது.

எப்படியாயினும் இது கர்நாடக அரசுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்பட்டபோது, அது தவறு என்றும், நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே, இனிவரும் நாட்களில் நீர் கொடுத்தால் அது பாஜக அரசியலுக்கு சாதகமாக மாறிவிடும். மேலும், முதலமைச்சர் விஜயின் வருகைக்குப் பிறகு தண்ணீர் கொடுக்கவில்லை என்றாலும், அது 'தவெக-காங்கிரஸ்' கூட்டணிக்கு சிக்கலாக மாறும் என காங்கிரஸ் தலைமையின் கருத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. எந்த வகையிலும் இந்த விவகாரம் கூட்டணி பிரச்சனையாக மாறிவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காரணங்களுக்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version