முதலமைச்சராக பதவி ஏற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்

தமிழ்நாட்டு முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். இதனை தொடர்ந்து கவர்னர் புறப்பட்டு சென்றதும் பதவியேற்பு விழா முடிந்தது. இதையடுத்து முதலமைச்சர் விஜய் விழா மேடையிலேயே முதல் கையெழுத்து இட்டார்.

இதுவரை இல்லாத நிகழ்வாக விழா மேடையில் முக்கிய கோப்புகளில் கையெழுத்து இட்டார். அதில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தில் கையெழுத்து இட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையை உருவாக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கும் கோப்பிலும் முதலமைச்சர் விஜய் கையெழுத்து இட்டார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version