BMW i5 LWB மின்சார கார்: முன்பதிவு துவங்கியது, 699 கி.மீ மைலேஜ்!

BMW i5 LWB மின்சார கார் முன்பதிவு தொடங்கியது.

உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபுள்யூ, தனது புதிய BMW i5 LWB மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சொகுசு மின்சார காரின் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் உயர்தர தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், ஒரே சார்ஜில் 699 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய மைலேஜ் திறனைக் கொண்டுள்ளது. இதில் 81.6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எக்ஸ்க்ளூசிவ் ஃபர்ஸ்ட் எடிஷனாக வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலில், வெறும் 99 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளன. செடான் வடிவத்தில் வந்துள்ள இந்த கார், 268 எச்பி குதிரைத் திறனுடன், மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது.

இந்த புதிய BMW i5 LWB காரின் நீளம் 2,156 மி.மீட்டர் மற்றும் உயரம் 1,520 மி.மீட்டர் ஆகும். இது 5 பேர் வரை அமர்ந்து பயணிக்கக்கூடிய வசதியுடன், 3,105 மி.மீட்டர் வீல் பேஸ் கொண்டுள்ளது. பொதுவாக பிஎம்டபுள்யூ கார்களின் கேபின், அதன் விசாலமான மற்றும் வசீகரமான அமைப்புக்காக அறியப்படுகிறது. அந்த வகையில், இந்த புதிய மாடலிலும் மேம்பட்ட கேபின் வசதிகள் நிறைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய BMW i5 LWB காரின் விலை சுமார் ரூபாய் 90 லட்சம் முதல் ரூபாய் 1 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சொகுசு கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் விருப்பப் பட்டியலில் இந்த கார் நிச்சயம் இடம்பெறும் என கருதப்படுகிறது.

காரின் முன்புறத்தில், பிஎம்டபுள்யூ-வின் கம்பீரத்தை எடுத்துக்காட்டும் வகையில் தங்க நிற கிரில் கம்பிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முகப்பு விளக்குகளாக எல்இடி டிஆர்எல்எஸ் பொருத்தப்பட்டுள்ளதுடன், டைட்டானியம் வெண்கலத்தில் பம்பர் அமைக்கப்பட்டுள்ளது.

காரின் உட்புறத்தில், டேஷ்போர்டில் அனைத்து தகவல்களையும் காண்பிக்கும் ட்வின் டிஸ்ப்ளே அமைப்பு இடம்பெற்றுள்ளது. ஸ்டீயரிங்கின் கீழ்பகுதி தட்டையாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் மற்றும் உயர்தர தோலால் ஆன இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. பின் இருக்கையில் அமர்பவர்களுக்கு கால்களை நீட்டி அமர போதுமான இடவசதி உள்ளது.

ஓட்டுநர் டிஸ்ப்ளே 12.3 இன்ச் அளவிலும், மற்றொரு டிஸ்ப்ளே 14.9 இன்ச் அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் லெவல் 2 அடாஸ், டயர் பிரஷர் மானிட்டரிங், முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், மற்றும் எலக்ட்ரானிக் பிரேக்கிங் போன்ற உயர்தர பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version