ஆயுஷ்மான் பாரத்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு பெற இப்படி விண்ணப்பிக்கலாம்!

ஆயுஷ்மான் பாரத்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசின் முக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத்-பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த மகத்தான திட்டத்தின் மூலம் பொதுமக்கள் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சைகளைப் பெற்று பயனடையலாம்.

இந்த திட்டத்தில் பயனடைய விரும்புவோர், அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmjay.gov.in மூலமாகவோ அல்லது தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்கள் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும், பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆயுஷ்மான் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது.

செயலி மூலம் விண்ணப்பிக்கும் முறை:
முதலில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலியைத் திறந்து, நீங்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்த சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் 70 வயதை பூர்த்தி செய்துள்ளீர்களா என்பது ஆதார் எண்ணின் அடிப்படையில் சரிபார்க்கப்படும். நீங்கள் 70 வயதை பூர்த்தி செய்யவில்லை என்றால், தகுதியானவர் அல்ல என்று தெரிவிக்கப்படும்.

தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு, சில முக்கிய விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மத்திய அரசின் சுகாதர திட்டங்களான மத்திய ஆயுத போலீஸ் படையினருக்கான ஆயுஷ்மான் சி.ஏ.பி.எப். அல்லது முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற ஏதேனும் ஒன்றில் நீங்கள் ஏற்கனவே பயனடைந்து வருகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்படும். இந்த திட்டங்களில் எதிலும் நீங்கள் பயன்பெறவில்லை என்றால் மட்டுமே, இந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவராக கருதப்படுவீர்கள்.

அடுத்து, உங்கள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை உள்ளிட வேண்டும். இவற்றை பூர்த்தி செய்தவுடன், உங்கள் சுய விவரங்கள் தானாகவே நிரப்பப்படும். பின்னர், உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை செல்ஃபோன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் தொடர்பு முகவரி, செல்ஃபோன் எண் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

இவை அனைத்தையும் சரியாக பதிவு செய்து முடித்தவுடன், உங்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அட்டை மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னும், பின்னும் ஆகும் செலவுகள் மற்றும் பிற மருத்துவச் செலவுகள் அனைத்தும் காப்பீடு செய்யப்படும்.

தேவையான முக்கிய ஆவணங்கள்:
* ஆதார் அட்டை
* ரேஷன் கார்டு (குடும்ப அட்டை)
* கைபேசி எண்

இந்த திட்டம், ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன் மூலம் உயர்தர மருத்துவ சேவைகளை அனைவரும் எளிதாக அணுக முடியும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version