ஆகஸ்ட் 3 ராசிபலன்: மனக்கவலை நீங்கி, காரிய வெற்றி நிச்சயம்!

இன்றைய ராசிபலன்

ஆகஸ்ட் 3, 2026, இன்றைய ராசிபலன்: இந்த நாள் உங்களுக்கு மனக்கவலைகள் நீங்கி, எடுத்த காரியங்களை திருப்தியுடன் செய்து முடிக்கும் நாளாக அமையும். உங்கள் சாமர்த்தியமான பேச்சு, இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களுக்கு கைகொடுக்கும்.

மேஷம்: இன்று உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். மனதிலிருந்த பயங்கள் விலகும். அனைவரிடமும் அனுசரித்து பேசுவது அவசியம். உங்கள் பேச்சின் இனிமையாலும், சாதுர்யத்தாலும் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 3, 6.

ரிஷபம்: இன்று மனக்கவலைகள் நீங்கி உற்சாகமான சூழ்நிலை நிலவும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்கள் விலகும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் உங்களை விட்டு விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெண் சிவப்பு. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

மிதுனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு, அது தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இள நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9.

கடகம்: இன்று குடும்ப உறுப்பினர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், கரும்பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.

சிம்மம்: இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பப் பிரச்சனைகள் தீரும். சூழ்நிலைக்கு ஏற்ப குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 1, 5.

கன்னி: இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகலாம். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3.

துலாம்: இன்று தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டியிருக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

விருச்சிகம்: இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழ்நிலை வரலாம். கணவன், மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, சாம்பல் நிறம். அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.

தனுசு: இன்று மனோ தைரியம் கூடினாலும், பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையலாம். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

மகரம்: இன்று உங்கள் அனைத்து பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 2, 9.

கும்பம்: இன்று மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3.

மீனம்: இன்று தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 5, 7.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version