இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக இரு சக்கர மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த சூழலில், மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஏதர், தனது புதிய மாடலான Ather Konarc இ-ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.
வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள இந்த புதிய Ather Konarc இ-ஸ்கூட்டரில், 2 கிலோவாட் மற்றும் 5 கிலோவாட் பேட்டரி வரை பொருத்தப்பட உள்ளது. இதன் முன் பக்க சக்கரம் 14 இன்ச் அளவிலும், பின்பக்க சக்கரம் 12 இன்ச் அளவிலும் இடம்பெறுகிறது. இந்த இ-ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமாக, ஒரே முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த இ-ஸ்கூட்டரில் 7 இன்ச் டிஎஃப்டி ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. அலாய் சக்கரங்கள், எல்இடி முகப்பு விளக்குகள், முன்பக்கம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கம் ட்ரம் பிரேக் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
சஸ்பென்ஷன் பொறுத்தவரை, முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் சிங்கிள் ரியர் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் எலக்ட்ரிக்கல் பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் இதில் உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.25 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த Ather Konarc இ-ஸ்கூட்டர், பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் (Battery as a Service – BaaS) வசதியிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இது சந்தையில் அறிமுகமானால், டிவிஎஸ் ஆர்பிட்டர், பஜாஜ் சேத்தக் சி2501, விடா விஎக்ஸ்2 மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் போன்ற இ-ஸ்கூட்டர்களுக்கு ஒரு வலுவான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் இந்த Ather Konarc இ-ஸ்கூட்டர் காணப்படுகிறது. ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரைப் போலவே, இந்த புதிய மாடலும் சந்தையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதர் நிறுவனத்தின் மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும், இந்த புதிய இ-ஸ்கூட்டர் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

