அண்ணன் சீர் திட்டம்: தங்க நாணயம், பட்டுப்புடவை பெற ஆதார் கட்டாயம்!

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படுகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 'அண்ணன் சீர் திட்டத்தின்' கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ், தகுதியான பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் பலன்களைப் பெற, விண்ணப்பிக்கும் பெண்கள் தங்களிடம் ஆதார் எண் இருப்பதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் அல்லது இதுவரை ஆதாருக்கு விண்ணப்பிக்காதவர்கள், பதிவு செய்வதற்கு முன்பாக ஆதார் பதிவுக்காக விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் பதிவு மையங்களை அணுகலாம்.

பெண்களுக்கு ஆதார் பதிவு மையங்கள் அருகில் இல்லாத பட்சத்தில் அல்லது ஆதார் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், அவர்களுக்கு வசதியான இடங்களில் சிறப்பு பதிவு முகாம்களை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை, பெண்கள் ஆதாருக்கு விண்ணப்பித்து, எண் ஒதுக்கப்படும் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டால், மாற்று அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். இதற்காக, ஆதார் பதிவு அடையாளச்சீட்டு அல்லது அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும்.

சமர்ப்பிக்கக்கூடிய மாற்று ஆவணங்களில் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம், பான்கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலை உறுதி திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம், டிரைவிங் லைசென்ஸ், அரசு அதிகாரி அல்லது வட்டாட்சியர் வழங்கிய புகைப்பட அடையாள சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை ஆகியவை அடங்கும்.

சில பெண்களுக்கு கைரேகை தரம் குறைவு காரணமாக ஆதார் அங்கீகாரம் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். இத்தகைய சூழல்களைக் கருத்தில் கொண்டு, கருவிழிகள் பதிவு அல்லது முக அங்கீகாரம் வழியாக சரிபார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட முறைகளில் அங்கீகாரம் பெற முடியாத சூழல் ஏற்பட்டால், ஆதார் கடிதத்தில் உள்ள க்யூஆர் கோடை சரிபார்த்து திட்டப் பயன்களை வழங்கலாம்.

இந்த அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் ஏற்படுத்தி தர வேண்டும். ஒருவேளை, மேற்கண்ட அனைத்து நடைமுறைகளிலும் தோல்வி அடைந்தால், மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் வழிமுறைகளை பின்பற்றி திட்டப் பயன்களை வழங்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 'அண்ணன் சீர் திட்ட' பயனாளிகள் இந்த புதிய அரசாணை குறித்த விவரங்களை கவனத்தில் கொண்டு, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பலன்களைப் பெற வேண்டும்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version