அனிருத் காதல் திருமணம்? ஸ்பெயினில் நவம்பரில் நிச்சயதார்த்தமா?

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனுஷ் நடித்த '3' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து, கடந்த 12 ஆண்டுகளில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது 'டிசி', 'ஜெயிலர் 2', 'தி பாரடைஸ்' போன்ற படங்களுக்கு இசையமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார்.

திரையுலகில் தனித்துவமான இசையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் அனிருத், காதல் மற்றும் திருமணம் குறித்த வதந்திகளால் அடிக்கடி செய்திகளில் அடிபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், தற்போது ஒரு புதிய கிசுகிசு அவரைப் பற்றி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

சமீபத்திய தகவல்களின்படி, அனிருத் ஒரு பிரபல தொழில் அதிபரின் மகளை காதலிப்பதாகவும், வரும் நவம்பர் மாதம் ஸ்பெயினில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருமண வதந்திக்கு அனிருத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை. இதனால், ரசிகர்கள் அவர் இதுகுறித்து விளக்கம் அளிப்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் இதுகுறித்த உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version