ஆந்திராவிற்கு சென்ற ரூ.37,000 கோடி முதலீடுகள்: தவெக அரசின் சறுக்கல்?

தமிழகத்திற்கு வரவிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடுகள், கடந்த ஒரு மாதத்தில் ஆந்திராவிற்குச் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டிருந்த ₹15,000 கோடி முதலீடு, 45,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தற்போது ஆந்திராவிற்கு நகர்ந்துள்ளது.

மேலும், 29 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய கடந்த ஆட்சியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) நிறுவனம், தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, அக்னி அஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ் (₹1,500 கோடி), ரிலையன்ஸ் (₹51,300 கோடி), அதானி (₹12,297 கோடி), ராயல் என்ஃபீல்டு (₹2,500 கோடி), அப்பல்லோ டயர்ஸ் (₹5,100 கோடி), கூகுள் (₹1.5 லட்சம் கோடி), கிரீன் எனர்ஜி வேவ் (₹2 லட்சம் கோடி) மற்றும் DRDO திட்டம் என பல பெரிய முதலீடுகள் ஆந்திராவிற்குச் சென்றுள்ளன.

ஒரே மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய சுமார் ₹37,000 கோடி முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றதன் மூலம், வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி அரசின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் முக்கிய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து, ஏற்கனவே ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கு பணிகளைத் தொடங்க உதவ தவறியதன் விளைவே இது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புதிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, சங்கங்களைச் சென்று பார்ப்பதாகவும், ரீலிஸ் போடுவதாகவும், நடனம் ஆடுவதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்த பல முக்கிய நிறுவனங்கள், தங்களது முதலீடுகளை ஆந்திராவிற்கு மாற்றியுள்ளது தமிழகப் பொருளாதாரத்திற்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version