அதிமுக தவெக ஆனது; இரட்டை இலை தான் விசில் – ஆதவ் அர்ஜூனா

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

திமுக ஆட்சியில் கரூர் பிரச்சாரத்தின் போது உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், இது ஒரு சூழ்ச்சி என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த ஆட்சியில் நடிகர் விஜய் கரூர் சென்றபோது போதுமான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும், ஆனால் தற்போது முதலமைச்சரான பிறகு கரூர் சென்றபோது எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இதுதான் திமுகவின் சூழ்ச்சி என்றும், இதுகுறித்து மக்கள் திமுகவை கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"திமுகவை கேள்வி கேட்ட எங்க அண்ணனை தமிழக மக்கள் முதல்வராக்கியிருக்கிறார்கள். இப்போது தெரிகிறதா எது உண்மையான அதிமுக என்று. அதிமுக செயலிழந்துவிட்டதால், தவெகவை அதிமுகவாக மக்கள் பார்க்கிறார்கள். அதனால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இரட்டை இலை தான் விசில், எனவே இரட்டை இலைக்கு பதில் விசிலுக்கு வாக்களியுங்கள், இரண்டும் ஒன்றாகிவிட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்க அண்ணன் இன்னும் முதலமைச்சர் ஆன உணர்வே இல்லாமல் மக்களோடு மக்களாக நிற்கும்போது, அமைச்சர்களாகிய நாங்களும் அப்படித்தான் இருக்க முடியும். அதிகார தோரணை எங்களுக்குக் கிடையாது, முதலமைச்சருக்கும் கிடையாது. மக்கள் சாதியையும் பார்க்கவில்லை, மதத்தையும் பார்க்கவில்லை, பணத்தையும் பார்க்கவில்லை. இதுதான் 2026-ன் முதல் வெற்றி" என்று கூறினார்.

புரட்சித் தலைவி அம்மாவுக்குப் பிறகு திமுகவை எதிர்த்து நிற்கக்கூடிய வலிமை நடிகர் விஜய்க்கு மட்டும்தான் இருக்கிறது என்றும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சிங்கம் போல் திமுகவை எதிர்த்து நின்றார்கள் என்றும், ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் திமுக கொள்ளையடித்தபோது அதிமுகவினர் குரல் கொடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

1972ல் எம்.ஜி.ஆரைப் பார்த்து கலைஞர் பயந்தார், பிறகு அம்மாவைப் பார்த்து திமுகவினர் பயந்தார்கள், அதற்குப் பிறகு திமுக பயந்து நடுங்கிய ஒரே ஆள் நம்முடைய தலைவர் விஜய் அண்ணன்தான் என்றும் அவர் கூறினார். இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version