பாஜகவுடன் அதிமுக பெரிய டீல்? பனையூர் பாபு சந்தேகம்

முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு

2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக 47 இடங்களை வென்றது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி முதல் தமிழ்நாட்டு பாஜகவினர் வரை அனைவரும் தீவிர பிரசாரம் செய்தனர்.

தற்போது, பாஜகவுக்கு அடிபணிந்து கிடக்கும் அதிமுகவை, தமாக (த.மா.கா) இவ்வளவு தைரியமாக உடைக்கிறது என்றால், அது பாஜகவின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்குமா? என்ற கேள்வியை முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு எழுப்பியுள்ளார். குதிரை பேரத்தில் தமாக ஈடுபடும்போது ஆளுநர் ஏன் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமாகவுக்கு தாவும் வகையில், இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் தள்ளிவைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவையெல்லாம் பார்க்கும்போது, பாஜகவுடன் அதிமுக ஒரு மிகப் பெரிய டீல் போட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது என பனையூர் பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜகவுக்கு கைமாறு செய்யும் விதமாக, விபி ஜி ராம் ஜி திட்டத்தை அமல்படுத்துவது, அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பாஜக சொல்லும் நபரை தேர்வு செய்வது, சட்டமன்றத்தில் ஆளுநரை குளிர்விப்பது போன்ற வேலைகளில் அதிமுக ஈடுபடுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

சுயலாபத்துக்காக மாநில உரிமைகளை அடகு வைக்கும் அதிமுகவின் முகத்திரை கிழியத் தொடங்கியிருக்கிறது என்றும் பனையூர் பாபு குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version