நடிகை ருக்மினி வசந்த்: ஆபாச வீடியோ வெளியிட்ட 3 பேர் கைது!

நடிகை ருக்மினி வசந்த் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என நடிகை ருக்மினி வசந்த் விளக்கமளித்துள்ளார்.

இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த வீடியோவை மர்ம நபர்கள் உருவாக்கியுள்ளதாகவும் அவர் பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகளின் கீழ் குற்ற எண் 36/2026 பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பிய குற்றவாளிகளைக் கண்டறிய ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், நடிகை ருக்மினி வசந்தை ஆபாசமாக டீப்ஃபேக் செய்ததாகக் கூறப்படும் மூன்று பேரை கர்நாடக சைபர் போலீஸ் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ரவிக்குமார், சந்திரகாந்த், ரஞ்சித் ஆகியோர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version