மதுரையில் அறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாகப் பேசினார். "கஜானா காலியாகிவிட்டது" என்று கூறி எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருக்கும் முதல்வர் விஜய், தனது ஆஸ்தான ஜோதிடரின் பேச்சைக் கேட்டு ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது எந்த வகையில் நியாயம்? என்று அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம் அமைப்பதற்கே ரூ.900 கோடிதான் செலவாகியிருக்கிறது. ஆனால், கஜானா காலியாகிவிட்டதாகக் கூறிவிட்டு, முதல்வர் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஒரு நடிகையும் சென்றுள்ளார். அவருடன் எத்தனை நடிகைகள் சென்றாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், வாக்களித்த மக்களுக்கு உண்மையைச் சொல்லுங்கள். நாங்கள் ஒரு டம்மி முதல்வரின் ஆட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மக்கள் வரிப்பணத்தில் ரூ.11 கோடியை செலவு செய்து லண்டன் சென்று கார் ரேஸ் நடத்துகிறார் முதல்வர். "என்னடா சண்டாளர்களா.. நீங்கதான் அடுத்த அமைச்சர் ஆகப்போறீங்க, உங்களுக்குத்தான் ஓட்டு" என்று மக்களிடம் கூறி, எங்களை நீங்கள் ஒழித்துவிட்டீர்கள்" என்று அவர் கடுமையாகச் சாடினார்.
அடுத்த அமைச்சர் எனக்கூறியே எங்களை ஒழித்துவிட்டீர்கள்: செல்லூர் ராஜூ ஆவேசம்
