MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அனுபவமற்ற அரசுக்கு சுயபுத்தியும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அனுபவமற்ற அரசுக்கு சுயபுத்தியும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அனுபவமற்ற அரசுக்கு சுயபுத்தியும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

அனுபவமற்ற அரசுக்கு சுயபுத்தியும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: செப்டம்பர் 9, 2026 5:17 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுதல்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
SHARE

கடந்த நான்கு மாதங்களாக விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கனகச்சிதமாக செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இந்த அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் செயல்பட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் காவிரியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் சீர்குலைந்துபோன சட்டம்-ஒழுங்கினை சீர்செய்வோம் என்று மார்தட்டிப் பேசிய த.வெ.க. அரசு, தற்போது குற்றச் சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்பதாக அவர் கூறியுள்ளார். ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல், அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து நிற்கும் இந்த அரசுக்கு சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உரிய நேரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்யாததால், அவை முளைவிட்டு வீணாகி, விவசாயிகளின் உழைப்பு பாழாகிறது என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விரிவாக எடுத்துரைத்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார். வெட்ட வெளியில் மழை வெள்ளத்தால் நெல்மணிகள் முளைத்து வீணாய் போனதையும், அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்த அரசை வலியுறுத்தியுள்ளார்.

அந்த நேரத்தில், குறைகளைச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் த.வெ.க. அமைச்சர்கள் பதில்களை சொன்னார்களே தவிர, வீணாய் போகும் நெல்மணிகளை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால், சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தஞ்சாவூர்-மானம்பாடி, நல்லிச்சேரி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், மழையில் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 20,000 ஆயிரம் நெல் மூட்டைகளும், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ராஜேந்திரபட்டினத்தில் 10,000 ஆயிரம் நெல் மூட்டைகளும், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே மேல்பெருமநல்லூரில் சுமார் 20,000 ஆயிரம் நெல் மூட்டைகளும், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் தொழுப்பேடு திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 50,000 மெட்ரிக் டன் நெல்லும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து மக்களுக்கு வெளிச்சம் தருவோம் என்பதுபோல், முடியாத அனைத்தையும் செய்து காட்டுவோம் என்று வாய்ப்பந்தல் போடுவதை இந்த அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை போக்குவது நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசிதான். அந்த அரிசியின் ஆதாரமாக திகழக்கூடிய நெல்மணிகள் வீணாய் போவதை வேடிக்கை பார்க்கும் இந்த அரசின் போக்கை ஏற்க முடியாது. மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென்று விளையாட்டு மாடல் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எடப்பாடி பழனிசாமிகுறுவை சாகுபடிசட்டம் ஒழுங்குத.வெ.க.தமிழக அரசுநெல் கொள்முதல்விவசாயிகள்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிராமப்புற வளர்ச்சி குறித்து பேசுகிறார் கிராம வளர்ச்சி மூலம் இந்தியாவின் எதிர்காலம்: யோகி ஆதித்யநாத்
Next Article வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்: வர்த்தக செயலர் தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிடும் காட்சி
தமிழ்நாடு

லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

2 Min Read
தமிழக அரசு சார்பில் புதிய மின்சார ஏசி பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிப்பு
தமிழ்நாடு

2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்: தமிழக அரசு அதிரடி முடிவு

தமிழக அரசு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. இவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ. வரை இயங்கும் திறன் கொண்டவை.…

2 Min Read
டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்கள்
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை: அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை!

டாஸ்மாக் கடைகளில் MRP விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் ஊழியர்களுக்கு தற்காலிக பணிநீக்கம், நிரந்தர பணிநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம்…

2 Min Read
மேற்கு வங்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு விழா
தமிழ்நாடு

மேற்கு வங்கத்திலும் தவெக கட்சி அலுவலகம் திறப்பு!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேசிய அளவிலான விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் தனது முதல் கட்சி அலுவலகத்தை கிழக்கு பர்த்வான் மாவட்டம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?