தவெக அரசு கடன் வாங்கி மக்களுக்கு நன்மை செய்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கடந்த ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டினார். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியோ கடன் வாங்கி மக்களுக்கு நல்லது செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரிப்பன் மாளிகையை கடந்த ஆட்சியாளர்கள் விற்றுவிடாமல் விட்டுச் சென்றது அதிர்ஷ்டம் என்றும், இல்லையெனில் அதையும் விற்றிருப்பார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரச்சனைகளைக் கேட்போம் என்றும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து மக்களுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டுள்ளதாகவும், தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆகிறது என்றும், எனவே சிறிது அவகாசம் தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
முதல்வர், அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைகளைத் தீர்க்க உத்தரவிட்டுள்ளதாகவும், தூய்மைப் பணியாளர்களை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார். பிரச்சனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை என்றும், அவற்றைச் சரிசெய்து தீர்வு காண வந்துள்ளதாகவும், மக்களுடன் துணை நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் இருந்தாலும், தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆன நிலையில், சிறிது அவகாசம் கொடுக்குமாறு அவர் மீண்டும் வலியுறுத்தினார். தூய்மைப் பணியாளர்கள் மீது யாரும் கை வைக்கக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எந்தச் சூழலிலும் தூய்மைப் பணியாளர்களைக் கைவிட மாட்டோம் என்றும், பிரச்சனைக்கு ஆதரவு தெரிவிக்க அல்ல, தீர்வு காணவே வந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் நிர்வாகச் சிக்கல்கள் இருப்பதாகவும், எனினும் அரசு நிர்வாகம் என்றும் மக்களுடன் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
