MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் ஆட்சியில் பழங்குடி மாணவிகள் படுகாயம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் ஆட்சியில் பழங்குடி மாணவிகள் படுகாயம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் ஆட்சியில் பழங்குடி மாணவிகள் படுகாயம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாடு

விஜய் ஆட்சியில் பழங்குடி மாணவிகள் படுகாயம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

Fernandez
Last updated: செப்டம்பர் 2, 2026 5:24 மணி
Fernandez
Share
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
SHARE

புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற்பட்ட விபத்தில் எட்டுக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் திரு. ஜோசப் விஜய்யின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

'சமூக நீதி பேசும் இந்த மண்ணில், கல்வி பயில ஆர்வத்துடன் வரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அநீதி, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே நேர்ந்த அவமானமாகும். தமிழகத்தின் பெண்களுக்கு அண்ணன் என்றும், மகன் என்றும் மேடைதோறும் பாச வசனம் பேசி ஆட்சிக்கு வந்த முதல்வர் திரு. விஜய் அவர்களது ஆட்சியில், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களும் அவமரியாதைகளும் மலிந்துவிட்டன. பள்ளி நேரங்களில் போதுமான பேருந்துகளை இயக்காமல், கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி மாணவிகளைத் தூக்கி எறிவதுதான் மாற்றத்திற்கான ஆட்சியா?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மேடை வசனங்களுக்கும் நிஜமான நிர்வாகத்திற்கும் துளிகூடச் சம்பந்தம் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், காயமடைந்த மாணவிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பள்ளி நேரங்களில் தடையின்றி கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இல்லையெனில், தமிழக மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காகப் பாரதிய ஜனதா கட்சி வீதியில் இறங்கிப் போராடும் என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேருந்தின் கூட்ட நெரிசலைக் காரணம் காட்டி, ஓட்டுநர் திடீரெனப் பேருந்துக் கதவைத் திறந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழக அரசுநயினார் நாகேந்திரன்பழங்குடியினர்பாஜகபுதுக்கோட்டைபேருந்து விபத்துமாணவிகள் விபத்துவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கொத்தனார் சம்பவம் தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழப்பு: அதிர்ச்சி
Next Article நேபாளம்-திபெத் எல்லையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதி நேபாளம்-திபெத் எல்லையில் திடீர் வெள்ளப்பெருக்கு: காரணம் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஓய்வூதியம் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்
தமிழ்நாடு

13 முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 13 முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 6 பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 82 வீரர்கள், 13 குடும்ப…

2 Min Read
தமிழ்நாடு

தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான் கவர்னர் உரை – டிடிவி தினகரன்

ஆளுநரின் இன்றைய உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம் போன்றது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியது ஏன் என்றும் அவர்…

1 Min Read
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்
தமிழ்நாடு

தடுப்பூசி போட்ட 10 மாத குழந்தை உயிரிழப்பு: பெற்றோர் கண்ணீர்

கோபிசெட்டிபாளையம் அருகே, தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் உயிரிழந்ததா என…

1 Min Read
கயத்தாறு கடைவீதியில் மதுபோதையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்யும் காட்சி
தமிழ்நாடு

கயத்தாறில் அரிவாளுடன் ரகளை: மதுபோதையில் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் மதுபோதையில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?