MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 4 கிலோ வாட் மின் இணைப்பு: கள ஆய்வு இனி இல்லை – மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 4 கிலோ வாட் மின் இணைப்பு: கள ஆய்வு இனி இல்லை – மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 4 கிலோ வாட் மின் இணைப்பு: கள ஆய்வு இனி இல்லை – மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு

4 கிலோ வாட் மின் இணைப்பு: கள ஆய்வு இனி இல்லை – மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 27, 2026 7:37 காலை
Fernandez
Share
தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு பலகை
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
SHARE

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு ஒரு நற்செய்தி! தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்காக 4 கிலோ வாட் வரையிலான புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, இனி நேரடி கள ஆய்வு தேவையில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒருமுனை வீட்டு மின் இணைப்புக்கான (நீட்டிப்பு அல்லது மேம்பாட்டுப் பணிகள் தேவையில்லாதவை) விண்ணப்பதாரர்களுக்கு, சுய உறுதிமொழி அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை, புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பதாரர்களுக்கான செயல்முறைகளை எளிதாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 4 கிலோ வாட் வரை உள்ள புதிய வீட்டு மின் இணைப்புகளுக்கு, விரிவாக்கம் அல்லது மேம்பாட்டுப் பணிகள் தேவையில்லாத பட்சத்தில், கள ஆய்வு இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய நடைமுறை ஆகஸ்ட் 28 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பதாரரே மின் இணைப்பு வழங்க வேண்டிய இடத்தின் ஜிபிஎஸ் இருப்பிடக் குறியீடுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆவணங்களின் அச்சு நகல்களைச் சமர்ப்பிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் அளிக்கும் ஜிபிஎஸ் தகவல்கள் ஜிஐஎஸ் செயலி மூலம் சரிபார்க்கப்படும். தகவல்கள் சரியாக இருந்தால், கள ஆய்வு இல்லாமல் விண்ணப்பம் அடுத்தக்கட்டத்துக்கு அனுப்பப்படும். சரிபார்ப்பில் தவறுகள் கண்டறியப்பட்டால், வழக்கமான கள ஆய்வு நடைமுறை மேற்கொள்ளப்படும். ஜிபிஎஸ் சரிபார்ப்பு முடிந்ததும், மதிப்பீடு செய்யப்பட்டு, மின் இணைப்பு வழங்கும் போது மீட்டர் பொருத்தப்படும் இடத்தின் உண்மையான ஜிபிஎஸ் தகவலும் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும்.

மின்சாரம் வழங்குவதற்கு வீட்டில் மின்சார சாதனங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இல்லாவிட்டால், வீட்டின் உரிமையாளருக்கு மின் இணைப்பு வழங்க தயார் நிலையில் உள்ளதற்கான தகவல் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். மேலும், மின் இணைப்பு வழங்குவதற்கான கருவிகளைப் பொருத்தி ஒரு மாதத்திற்குள் சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படும். ஒரு மாதத்திற்குள் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மின் இணைப்பு பெறாவிட்டால், விண்ணப்பம் காலாவதியானதாகக் கருதப்பட்டு ரத்து செய்யப்படும். மீட்டர் பாதுகாப்புக் கட்டணத்தைத் தவிர பிற கட்டணங்கள் திருப்பித் தரப்படாது.

சரிபார்ப்பு தோல்வியுற்றால், அந்த விண்ணப்பம் ஜிஎஸ்ஐ மொபைல் செயலியின் ஆய்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வழக்கமான விண்ணப்பமாகக் கருதப்பட்டு அதன் ஆய்வு நிலைகளைப் பின்பற்றித் தொடரப்படும். விண்ணப்பத்தை ஆய்வு செய்தல் அல்லது மாற்றங்கள் குறித்த தகவல்கள் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும். இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 28 முதல் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் ஒருவர் கூறுகையில், 'தமிழ்நாட்டில் விண்ணப்பம் செய்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், விண்ணப்பம் செய்த பின்னர் வீட்டில் மின் இணைப்பு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதா என்பதை வணிக ஆய்வாளர் நேரில் சென்று உறுதி செய்வார். அதன் தொடர்ச்சியாக பீல்டுமேன் நேரில் சென்று மின் இணைப்பை பொருத்துவார். அப்போது மின் இணைப்பு எண் உள்ளிட்டவை வழங்கப்படும். ஆனால் எந்த வீட்டிலும் மின் இணைப்பு 24 மணி நேரத்தில் வழங்க முடிவதில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஜிஎஸ்ஐ குறியீடு சரியாக காண்பிக்காவிட்டால் மின் இணைப்பு வழங்க முடியாத நிலை உருவாகும்' என்றார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:4 KW4 கிலோ வாட்New Electricity ConnectionTamil Nadu Electricity Boardதமிழ்நாடு மின்சார வாரியம்மின் இணைப்புமின் இணைப்பு புதிய நடைமுறைமின்சார வாரியம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பச்சை பூண்டு மற்றும் பூண்டு ஜூஸ் கோப்பை பச்சை பூண்டு ஜூஸ்: நோய்களை விரட்டும் அற்புத பானம்!
Next Article தேர்தல் ஆணையம் சார்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு 2029 தேர்தல்: 15 கோடி ஜென்-சி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பான விசாரணை
தமிழ்நாடு

தனியார் பள்ளி மோசடி: அன்பில் மகேஷுக்கு நெருக்கடி அதிகரிப்பு

தனியார் பள்ளிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவரது…

2 Min Read
நெல்லை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த குழாய்கள் தீப்பிடித்து எரிந்த காட்சி
தமிழ்நாடு

நெல்லை: குடிநீர் குழாய்கள் தீப்பிடித்து எரிந்தன – பெரும் புகை மூட்டம்

நெல்லை பொதிகை நகர் அருகே கூட்டு குடிநீர் திட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் ஏற்பட்ட புகை 4 கி.மீ.…

2 Min Read
ஆடி வெள்ளி அன்று அம்மன் வழிபாடு செய்யும் பெண்கள்
தமிழ்நாடு

ஆடி வெள்ளி: இந்த பொருட்களை வாங்கினால் லட்சுமி கடாட்சம் குறையுமா?

ஆடி மாதத்தின் புனிதமான வெள்ளிக்கிழமைகளில் சில பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு காண்போம்.

4 Min Read
தமிழ்நாடு

நீலாங்கரையில் இருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

சென்னை நீலாங்கரையில் இருந்து பதவியேற்பு விழாவிற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புறப்பட்டார். இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கவர்னர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?