MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை

தமிழ்நாடு

காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை

Fernandez
Last updated: ஆகஸ்ட் 16, 2026 1:54 மணி
Fernandez
Share
கர்நாடக காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்
கர்நாடக காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்
SHARE

கர்நாடக மாநிலம், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் காணாமல் போன தங்கள் மாடுகளைத் தேடிச் சென்ற மூன்று தமிழர்கள், மான் வேட்டையாடியதாகக் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதிகளைச் சேர்ந்த சிலர் காட்டுக்குள் மான் வேட்டையாடச் சென்றதாக சாக்கியம் பகுதி வனத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை ஆறு மணிக்கு, தோமையார் பாளையம் மற்றும் சாக்கியம் வனத்துறை அலுவலர்கள் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது, மரியமங்கலம் ஊரை அடுத்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது வனத்துறையினருக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வனத்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வனத்துறை ஊழியர் ஒருவர் காயமடைந்ததாகவும், வனத்துறையினர் திருப்பிச் சுட்டதில், மான் வேட்டையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் ஜகன்னாததொட்டி பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் என்பவரின் மகன் அந்தோணிசாமி (50 வயது), மரியமங்கலத்தைச் சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (42 வயது), லாசர் தொட்டி பகுதியைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33 வயது) ஆகிய மூன்று பேரும் உயிரிழந்ததாகவும், கொலைகார கர்நாடக வனத்துறை தரப்பில் கதை சொல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதாஸ் (48 வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்த மூன்று பேர் மற்றும் படுகாயமடைந்த மகிமைதாஸ் ஆகிய நால்வரும் கொள்ளேகால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, மகிமைதாஸ் மேல் சிகிச்சைக்காக மைசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் மைசூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கொள்ளேகால் மாவட்ட வன அலுவலரும், காவிரி வன உயிரியல் சரணாலய துணை வனப்பாதுகாவலர் (பொறுப்பு) மரியசுவாமி தெரிவித்துள்ளார்.

காணாமல் போன தங்கள் மாடுகளைத் தேடிச் சென்ற அப்பாவித் தமிழர்கள், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

கர்நாடக வனத்துறையினரின் இந்தச் செயல், மனித உரிமை மீறல் என்றும், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery Wildlife SanctuaryKarnatakaTamilகர்நாடகாகாவிரி வனவிலங்கு சரணாலயம்சுட்டுக்கொலைதமிழர்கள்தமிழ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மஹிந்திரா பொலிரோ புதிய மாடல் வாகனம் புதிய மஹிந்திரா பொலிரோ: EMI மூலம் வாங்குவது எப்படி?
Next Article ரயில் நிலைய குடிநீர் குழாய் ரயில் நிலைய குடிநீர்: இ-கோலி பாக்டீரியா கண்டுபிடிப்பு – அதிர்ச்சி தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தின் முன்னாள் துணை சபாநாயகர்

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 16, 2026

ChatGPT உதவியுடன் இளைஞர் செருப்பை கண்டுபிடித்தார்

மத்திய பிரதேசத்தில், கோயிலுக்கு வெளியே குவிந்திருந்த ஆயிரக்கணக்கான…

ஆகஸ்ட் 16, 2026

செங்கோட்டைக்கு சென்ற மோடியை வழிமறித்த மயில்கள், விலங்குகள்!

பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லவிருந்த நிலையில், அவர்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித…

ஆகஸ்ட் 16, 2026

மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: கடிதம் எழுதி வைப்பு

மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ்…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

காலையில் சுறுசுறுப்பாக இருக்க உதவும் எளிய வாழ்க்கை முறை குறிப்புகள்
லைஃப் ஸ்டைல்

காலையில் சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்!

காலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக தண்ணீர், இயற்கை வெளிச்சம், உடற்பயிற்சி, சத்தான காலை உணவு, அமைதியான தொடக்கம் ஆகியவற்றை பழக்கமாக்கினால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

1 Min Read
முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுகவை விமர்சித்த தங்கம் தென்னரசு: கடன் சுமை உயரும் என எச்சரிக்கை

திமுகவின் நிதிநிலை அறிக்கையை முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்றும், வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாகவும்…

2 Min Read
தமிழ்நாடு

59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி

59 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நெகிழ்ச்சி…

1 Min Read
தமிழ்நாடு

விஐடி முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால்: வனப்பணி தேர்வில் 110வது இடம்!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சவுரப் குமார் பால், இந்திய வனப்பணித் தேர்வில் 110-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். தொழில்நுட்பப் பின்னணியில் இருந்து வந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?