MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சுதந்திர தின உரையில் மோடி: 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சுதந்திர தின உரையில் மோடி: 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சுதந்திர தின உரையில் மோடி: 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்

தமிழ்நாடு

சுதந்திர தின உரையில் மோடி: 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 15, 2026 8:38 காலை
Fernandez
Share
டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
SHARE

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இது, பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்ந்து 13வது முறையாகும்.

டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் 'வீடியோ' பகுப்பாய்வு வசதி கொண்ட ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விழா நடைபெற்றது. முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் பங்கேற்றனர்.

முன்னதாக, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடிக்கு, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இது செங்கோட்டையில் சுதந்திர விழா நிகழ்ச்சிகள் துவங்கும் போது 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படுவது முதல் முறையாகும். இது குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, 'இன்று, ஒவ்வொரு இதயமும் 'வந்தே மாதரம்' எனும் தாளத்திற்கு ஏற்பத் துடிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மூவர்ணக் கொடி உள்ளது' என உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டார்.

அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தனது அஞ்சலியை செலுத்திய பிரதமர், 'இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலித்த தருணம். இன்று இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்' எனத் தெரிவித்தார்.

மேலும், '2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே நமது பெரும் கனவு. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, வளர்ந்த நாடாக மாறுவதற்கான உறுதியை மேற்கொள்ளும்போது, அது நமது துணிச்சலின் அடையாளமாக வெளிப்படுகிறது' என்று அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த பிரதமர், 'பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் – நாங்களும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம்' எனத் தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமத் தொழில் உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 சதவீதமும் அதிகரித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'ஒரு நாடு தனது கனவுகள், உறுதிப்பாடு மற்றும் உள்ளார்ந்த வலிமை ஆகியவற்றால் உந்தப்பட்டு முன்னேறும்போதுதான் அது மகத்தானதாகித் தனது இலக்குகளை அடைகிறது. சிறிய கனவுகள் இனிப் போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில், பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்துவதோடு, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளையும் அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதியான மனநிலை இருக்கும்போது, இடர்பாடுகள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் கூட முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்கும் ஆற்றல் இயல்பாகவே உருவாகிறது' என பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தினார்.

'2047-ஆம் ஆண்டில் நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றியிருக்க வேண்டும் என்பதே நமது தொலைநோக்குப் பார்வையாகும். 140 கோடி குடிமக்களின் கூட்டு முயற்சியாலும், கடின உழைப்பு மனப்பான்மையாலும் நாம் இந்த இலக்கை அடைய வேண்டும்' என்று அவர் கூறினார். மேலும், 'நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாறி, நமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இன்று, ஒவ்வொரு இந்தியரும் 'மேக் இன் இந்தியா', 'சுதேசி' மற்றும் 'வோக்கல் ஃபார் லோக்கல்' (Vocal for Local) போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து வருகின்றனர்' என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2047Developed NationIndependence DayPM Modiஇந்திய பொருளாதாரம்சுதந்திர தினம்பிரதமர் மோடிவளர்ந்த நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article குடியரசு தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ் குடியரசு தலைவர் விருது பெறும் தமிழரான உ.பி. ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ்
Next Article சுக்பீர் சிங் பாதல் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் அமைதிக்கு சதி: சுக்பீர் சிங் பாதல் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத் தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

காவிரியில் தமிழகத்திற்கு 10,000 கன அடி நீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் 12,000 கன அடி…

ஆகஸ்ட் 15, 2026

போலி இணையதளங்கள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானம், தங்கள் பெயரில் இயங்கும்…

ஆகஸ்ட் 15, 2026

40+ நாடுகளுடன் இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்: மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையில், 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
தமிழ்நாடு

கரூர் கூட்டநெரிசல் வழக்கு: சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரிக்கை – ஆர்.எஸ்.பாரதி

கரூர் கூட்டநெரிசல் வழக்கு: நலத்திட்ட உதவிகள் மூலம் சாட்சிகள் பாதிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்.

1 Min Read
தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 2 தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறப்பு!

திண்டுக்கல் மாவட்டம் மோளப்பாடியூரில் இரண்டு தலைகளுடன் அதிசய கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இதைக் காண அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

விஜய் ‘தாய் மாமன்’ கருத்து: சீமான் கேள்வி

கோவையில் மாணவர் அமுதன் கொலை: 'குழு மோதல்' என அரசு மூடி மறைப்பதாக சீமான் குற்றச்சாட்டு. முதல்வர் விஜய் 'தாய் மாமன்' கருத்து குறித்து கேள்வி.

2 Min Read
தமிழ்நாடு

கோவையில் சிறுமி கொடூர கொலை: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?