MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மதுரை அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மதுரை அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மதுரை அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 30, 2026 7:10 மணி
Fernandez
Share
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை
SHARE

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரன் என்ற இளைஞரின் கையில் இருந்த காயத்திற்கு கூட கடந்த நான்கு நாட்களாக மருந்து போடவில்லை என்றும், சாதாரண கட்டு போடுவதற்கு கூட பணம் கேட்பதாகவும் அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த அவலநிலையால், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரமேஸ்வரன் உயிரிழந்தார்.

இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்கள் உறவினர் உயிரிழந்ததாக அவர்கள் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரன் என்ற இளைஞருக்கு, நரம்புகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக பணம் பெற்றதாக வந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், அது குறித்து புகார் அளிக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FractureGovernment HospitalMaduraiMedical NegligenceYouth deathஅரசு மருத்துவமனைஇளைஞர் உயிரிழப்புஎலும்பு முறிவுசிகிச்சை அலட்சியம்மதுரைமதுரை செய்திகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக முதல்வர் விஜய் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சந்திப்பு ஆகஸ்ட் 3-ல் விஜய்-சிவக்குமார் சந்திப்பு உறுதி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Next Article நடிகர் கவின் மற்றும் அவரது மனைவி மோனிஷாவுடன் இரட்டைக் குழந்தைகள் நடிகர் கவினுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் அந்தஸ்து: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

184 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் படிக்கும் அந்தஸ்தை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் இருவரும் இனி இங்கு…

1 Min Read
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுக-தவெக இணைப்பு தவறில்லை: மாணிக்கம் தாகூர்

திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலைநோக்கு பார்வை கொண்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.…

2 Min Read
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
தமிழ்நாடு

இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை: ஜவாஹிருல்லா

இளைஞர்களின் எழுச்சி, மத்திய அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை எழுதத் தொடங்கியுள்ளது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல், மக்களின் ஒற்றுமை அதிகார ஆணவத்தை வீழ்த்தும்…

3 Min Read
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு

மருத்துவக் கல்விக்கு குட் நியூஸ்: 100 இடங்கள் அதிகரிப்பு!

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 100 மருத்துவ இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?