MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை

இந்தியா

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து: நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ தீவிர விசாரணை

Admin
Last updated: மே 13, 2026 6:52 காலை
Admin
Share
SHARE

வினாத்தாள் கசிந்தது கண்டறியப்பட்டதால், மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்த சூழலில் நீட் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பாக என்.டி.ஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான தேர்வுகளை நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த என்.டி.ஏ உறுதி பூண்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளை கேட்டுக்கொண்டோம். அந்த அமைப்புகள் விசாரணை நடத்தி என்.டி.ஏ-விடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தன. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நீட் மறுதேர்வுக்கு புதிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டாம். ஏற்கனவே செலுத்திய தேர்வுக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். என்.டி.ஏ-வின் சொந்த நிதியில் மறுதேர்வு நடத்தப்படும். மாணவ, மாணவிகள் ஏற்கனவே எழுதிய தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வுக்கான தேதி, ஹால் டிக்கெட் குறித்து என்.டி.ஏ சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு neet-ug@nta.ac.in இ-மெயில் முகவரி மற்றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு என்.டி.ஏ தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் கூறும்போது, 'மாணவ, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அகற்றப்படுவார்கள். வலுவான பாதுகாப்பு நடைமுறைகளோடு நீட் மறுதேர்வு நடத்தப்படும். இதுதொடர்பாக விரைவில் விரிவான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும். இதன்மூலம் எதிர்காலத்தில் தவறுகள் நடைபெறுவது தடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

நீட் மறுதேர்வு குறித்து என்.டி.ஏ வட்டாரங்கள் கூறும்போது, 'வினாத்தாள் கசிவு காரணமாகவே நீட் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டம், வினாத்தாள், தேர்வு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது. மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படக்கூடும்' என்று தெரிவித்தன.

ரூ.100 கோடி வரை… நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்து முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: நீட் தேர்வுக்கான வினாத்தாளை அச்சிட்ட அச்சகம் அல்லது வாகனங்களில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட போது வினாத்தாள் கசிந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். முதல் வினாத்தாளை வழங்கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. வினாத்தாள் சில இடங்களில் ரூ.28 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவர் பிடிபட்டுள்ளார். இதே வழக்கில் மகாராஷ்டிராவின் நாசிக்கில் சுபம் காரினார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களின் போலீஸாரிடம் இருந்து ஆதாரங்களைப் பெற்று முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் சார்பில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லி மட்டுமல்லாது பாட்னா, கோட்டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நல்ல முதல்வர் கிடைத்துவிட்டார் – ஆர்.ஜே. பாலாஜி
Next Article ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

இந்தியா

தி.மு.க.-வை கைவிட்ட காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, முதுகில் குத்தும் கட்சி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்கள் கிடைத்தது. தேர்தல் முடிவு 4-ந்தேதி வெளியான…

1 Min Read
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம்
இந்தியா

கார்கே பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘சுத்திகரிப்பு’ சடங்கு: விசாரணைக்கு பாஜக தலைவர் உத்தரவு

உத்தரகண்டில் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் 'சுத்திகரிப்பு' சடங்கு நடத்தப்பட்டதாக சர்ச்சை. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

ராகுல் காந்தி பிறந்தநாள்: நேரு-காந்தி குடும்பம் இனி பிரதமராக வாய்ப்பில்லை – பாஜக கிண்டல்

ராகுல் காந்தி தனது 56வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரை எதிர்கால பிரதமர் வேட்பாளராக சித்தரிக்கும் கருத்துக்களுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்…

1 Min Read
மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு பலகை
இந்தியா

மகாராஷ்டிராவில் புதிய விதி: மராத்தி தெரியாவிட்டால் லைசென்ஸ் இல்லை

மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 18 முதல் புதிய விதி அமல். மராத்தி மொழி தெரியாத ஆட்டோ, டாக்ஸி, கேப் ஓட்டுநர்களுக்கு லைசென்ஸ் கிடையாது. அரசு தீவிர சோதனைக்கு தயார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?