ஆந்திர பிரதேசத்தின் பொலாவரம் மாவட்டத்தில் உள்ள ராம்பசோதாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் கலந்துகொண்ட 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி, நிகழ்ச்சி நடந்து 3 நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வில், முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். அப்போது, சிறப்பாகப் படிக்கக்கூடிய மாணவியான முர்ரம் ஷிவானி என்ற மாணவி, மேடையில் ஏறி தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். அடுத்த ஆண்டு 'ஷைனிங் ஸ்டார்' விருது பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் அப்போது தெரிவித்தார்.
ஷிவானியின் பேச்சால் கவரப்பட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரை மேடைக்கு அழைத்து தன்னுடன் அமர வைத்து சிறிது நேரம் உரையாடினார். மேலும், நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து முதல்வரும் மதிய உணவை உண்டார்.
இந்த நிலையில், முதல்வர் பாராட்டிய சில நாட்களிலேயே மாணவி ஷிவானி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாணவியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பாராட்டிய மாணவி இப்படி ஒரு முடிவை எடுத்தது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு மாணவியுடன் உரையாடியதும், அவருடன் அமர்ந்து மதிய உணவு உண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் மாணவியின் திடீர் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாணவி ஷிவானி, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியாக அறியப்படுகிறார். அவரது தற்கொலைக்கான பின்னணி குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் பாராட்டிய மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஆந்திர மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
