MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 200 ரோஸ்டர் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஆசைத்தம்பி வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 200 ரோஸ்டர் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஆசைத்தம்பி வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - கல்வி & வேலைவாய்ப்பு - 200 ரோஸ்டர் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஆசைத்தம்பி வலியுறுத்தல்

கல்வி & வேலைவாய்ப்பு

200 ரோஸ்டர் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஆசைத்தம்பி வலியுறுத்தல்

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 27, 2026 11:54 காலை
Sri Prem Kumar R
Share
மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசைத்தம்பி நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறார்
மதுரையில் நடைபெற்ற 'உள் ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி' நூல் வெளியீட்டு விழாவில் மக்கள் தேசம் கட்சி தலைவர் ஆசைத்தம்பி.
SHARE

பட்டியல் சமூகத்தினருக்கான உள் ஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ள 200 ரோஸ்டர் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மக்கள் தேசம் கட்சித் தலைவர் ஆசைத்தம்பி வலியுறுத்தியுள்ளார்.

'உள் ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி' என்ற நூல் வெளியீட்டு விழா மதுரை மாட்டுத்தாவணியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மக்கள் தேசம் கட்சித் தலைவர் ஆசைத்தம்பி, 2009-ல் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட உள் ஒதுக்கீடு முறை அருந்ததியர் சமூகத்திற்கு எதிரானது அல்ல என்றும், ஆனால் அது அமல்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குளறுபடிகள் காரணமாக பறையர், தேவேந்திரர், குறவர் போன்ற பிற பட்டியல் சமூக மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

அரசுக்கும் தங்களுக்குமான இந்த உரையாடலை, இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற திமுக உள்ளிட்ட கட்சிகள் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், திமுக அரசு கொண்டுவந்த 200 ரோஸ்டர் முறையால் இட ஒதுக்கீட்டில் பின்தங்குவதாகவும், எனவே உடனடியாக அந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வணங்காமுடி பதிப்பகம், பண்டிதர் பதிப்பகம், அயோதிதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் எழுத்தாளர் அருள் முத்துக்குமரன் எழுதிய 'உள் ஒதுக்கீட்டில் ஒளிந்திருக்கும் சமூக அநீதி' என்ற நூலின் வெளியீட்டு விழா, மாட்டுத்தாவணி ராமசுப்பு அரங்கில் அ.தமிழ்முரசு தலைமையில் நடைபெற்றது. மக்கள் தேசம் கட்சி தலைவர் அ.ஆசைத்தம்பி நூலினை வெளியிட, பேராசிரியர் கி.கதிரவன் மற்றும் வழக்கறிஞர் பெரியார் வேந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில், உள் ஒதுக்கீட்டை மறுசீரமைப்பு செய்வதுடன் 200 ரோஸ்டர் முறையை நீக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பட்டியல் சமூக மக்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நூல் மதிப்புரையை நாம் தமிழர் கட்சி புதுகை ஜெயசீலன், நீலப்புலிகள் இயக்கம் தலைவர் டி எம் புரட்சிமணி, பேராசிரியர் சி.லட்சுமணன், இயக்குநர் வீரபாண்டியன், மனித உரிமை செயல்பாட்டாளர் கி.ஆறுமுகம், எழுத்தாளர் சாத்தன் குன்றன், வழக்கறிஞர் செ.பாஸ்கர், மூவேந்தர் புலிப்படை தலைவர் மு.க.வையவன், தமிழர் தேசிய கழகத் தலைவர் வழக்கறிஞர் கணேசன் மூர்த்தி ஆகியோர் வழங்கினர். நன்றியுரையை ச.ஆண்டாள் நாச்சியார் நிகழ்த்தினார்.

பேராசிரியர் லட்சுமணன் பேசுகையில், உள் இடஒதுக்கீடு அருந்ததியர்களுக்கு வழங்கலாமா என்று ஆராய நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்தது. அந்த ஜனார்த்தனன் கமிட்டி அறிக்கை, அமல்படுத்திய 10 ஆண்டுகளுக்குப் பிறகு இதனை மறுவரையறை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டது. ஆனால், கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக உள் இடஒதுக்கீடு அமலில் இருப்பதால், ஜனார்த்தன கமிட்டியின் அறிக்கையின் பிரகாரம் இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பேராசிரியர் கதிரவன் பேசுகையில், உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு 16 ஆண்டுகள் ஆகியுள்ளதால், எஸ்சி மற்றும் எஸ்சிஏ பட்டியல் பிரிவினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அடைந்த தேர்ச்சியை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:200 ரோஸ்டர் முறைAsaitambiMakkal Desam PartySC internal reservationஆசைத்தம்பிஉள் ஒதுக்கீடுபட்டியல் சமூக மக்கள்மக்கள் தேசம் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் ராயல் என்பீல்டு கிளாசிக் 350: வெறும் 5000 ரூபாயில் சொந்தமாக்கலாம்!
Next Article கியா சோனெட் டீசல் காரின் வெளிப்புறத் தோற்றம் கியா சோனெட் டீசல்: விலை குறைவு, ஆனால் இந்த குறைகள் யாருக்கு பொருந்தாது?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது 5 வயது மகன்

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன்: 5 வயது மகன் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் மகோபாவில், 8 மாத கர்ப்பிணி மனைவியை கணவனே அரிவாளால் வெட்டி…

ஜூலை 27, 2026

நீட் தேர்வு ரத்து கோரி டெல்லியில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி…

ஜூலை 27, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்: ‘லிவ்-இன் உறவு முறை சீரழிவு’

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், 'லிவ்-இன்' உறவு…

ஜூலை 27, 2026

மத்திய அரசுக்கு சிஜேபி கண்டனம்: மாணவர் போராட்டத்தை கைவிட்டது நம்பிக்கை துரோகம்

மத்திய அரசு தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது இளைஞர்களுக்கு…

ஜூலை 27, 2026

நீட் மறுதேர்வில் ஏமாற்றம்: மாணவி தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில், நீட் மறுதேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால்…

ஜூலை 27, 2026

You Might Also Like

இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணிகளுக்கான அறிவிப்பு
கல்வி & வேலைவாய்ப்பு

ரயில்வேயில் 4098 இளநிலை பொறியாளர் வேலைகள்: விண்ணப்பிப்பது எப்படி?

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 4098 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கணினி வழித் தேர்வில் நடைபெறும்.

1 Min Read
IBPS PO 2026 வேலைவாய்ப்பு அறிவிப்பு - உதவி மேலாளர் பணியிடங்கள்
கல்வி & வேலைவாய்ப்பு

IBPS PO 2026: 7365 உதவி மேலாளர் பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

IBPS PO 2026: பொதுத்துறை வங்கிகளில் 7365 உதவி மேலாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

2 Min Read
கல்வி & வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை: 12,256 பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறைகளில் 12,256 குரூப் 'பி' மற்றும் 'சி' பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.06.2026.

1 Min Read
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரக கட்டிடம்
கல்வி & வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு ஆட்சியரகத்தில் வேலைவாய்ப்பு: 12-ம் வகுப்பு, டிகிரிக்கு விண்ணப்பிக்கலாம்!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12-ம் வகுப்பு மற்றும் டிகிரி தகுதியுடன் 3 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?