இந்தியாவில் ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிவிஎஸ் மற்றும் ஹோண்டா போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக பல புதிய நிறுவனங்களும் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு நிறுவனமான VLF, தங்களின் VLF Mobster ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் மைலேஜ் குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.
VLF Mobster ஸ்கூட்டரின் விலை 1 லட்சத்து 54 ஆயிரத்து 190 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 125 சிசி திறன் கொண்டதுடன், இதன் எடை 122 கிலோ ஆகும். இருக்கையின் உயரம் 797 மி.மீட்டர் ஆகவும், பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 8 லிட்டர் ஆகவும் உள்ளது.
மைலேஜ் என்று பார்த்தால், இந்த VLF Mobster ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 46 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பினால், சுமார் 368 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த ஸ்கூட்டர் 11.7 என்எம் டார்க் இழுவைத்திறன் கொண்டதுடன், அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
இந்த VLF Mobster ஸ்கூட்டரில் 1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட், 4 வால்வுகள் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்டுடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, சுவிட்சபிள் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இதில் இடம்பெற்றுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டு டிஸ்க் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் 12 இன்ச் சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர்கள் ஆகியவை இதன் சக்கர அமைப்பில் அடங்கும். மேலும், முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃப்ரண்ட் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் கேஸ் சார்ஜட் டபுள் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
வசதிகளைப் பொறுத்தவரை, 8 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, 155 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை உள்ளன. இந்த ஸ்கூட்டருக்கு 40 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 4 வருடங்களுக்கு வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் மொபைல் போன் இணைப்பு வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி போன்ற நவீன அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
டிஜிட்டல் முறையில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ், 2 ட்ரிப்மீட்டர்கள், டேக்கோமீட்டர் ஆகியவை காண்பிக்கப்படுகின்றன. மேலும், ஸ்டாண்ட் அலாரம், லோ ஃபியூல் இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர், எஞ்சின் டெம்பரேச்சர் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர், கால்/எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் நேரம் பார்க்கும் வசதி போன்ற பல டிஜிட்டல் வசதிகளும் இதில் உள்ளன.
கூடுதல் சிறப்பம்சங்களாக, ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், செல்ஃப் ஸ்டார்ட், சைலன்ஸ் கவர், பகலில் எரியும் விளக்குகள், பிரேக்/டெயில் விளக்குகள், பாஸ் விளக்குகள், சிக்னல், டிக்கி வசதி மற்றும் பில்லியன் சீட் வசதி ஆகியவை இந்த VLF Mobster ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. டூயல் எல்இடி ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகளும் இதன் தோற்றத்தை மெருகூட்டுகின்றன.
VLF Mobster ஸ்கூட்டர் அதன் சிறப்பான மைலேஜ், நவீன வசதிகள் மற்றும் கவர்ச்சிகரமான விலை ஆகியவற்றால் வாடிக்கையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒருமுறை டேங்க் நிரப்பினால் 368 கி.மீ தூரம் வரை செல்லக்கூடிய இதன் திறன், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றதாக அமையும்.
