MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேவகோட்டை கோட்டை அம்மன் ஆடித் திருவிழா: 15 நாட்கள் கோலாகலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேவகோட்டை கோட்டை அம்மன் ஆடித் திருவிழா: 15 நாட்கள் கோலாகலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேவகோட்டை கோட்டை அம்மன் ஆடித் திருவிழா: 15 நாட்கள் கோலாகலம்!

தமிழ்நாடு

தேவகோட்டை கோட்டை அம்மன் ஆடித் திருவிழா: 15 நாட்கள் கோலாகலம்!

Fernandez
Last updated: ஜூலை 20, 2026 8:24 மணி
Fernandez
Share
தேவகோட்டை கோட்டை அம்மன் ஆடித் திருவிழா தொடக்கம்
தேவகோட்டை கோட்டை அம்மன் ஆடித் திருவிழா இன்று தொடங்கியது.
SHARE

தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற கோட்டை அம்மன் ஆடித் திருவிழா இன்று (20/07/2026) மேடை போடுதல் நிகழ்வுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இந்த 15 நாள் திருவிழாவின் போது மட்டுமே பக்தர்கள் அம்மனை நேரடியாக தரிசிக்க முடியும். மற்ற நாட்களில், கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பீடத்திற்கு மட்டுமே வழிபாடு நடைபெறும்.

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதம் என்றாலும், தேவகோட்டை கோட்டை அம்மன் திருவிழா மிகவும் பிரமாண்டமாகவும் விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா, ஆடி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று, மேடை போடுதல் நிகழ்வுடன் இனிதே ஆரம்பமானது. திருவிழா காலங்களில் மட்டுமே அம்மனை நேரடியாக தரிசிக்க முடியும் என்பதால், அதுவரை கோவிலில் உள்ள பீடத்திற்கு மட்டுமே பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

வருடம் முழுவதும் நீரில் இருக்கும் அம்மனுக்கு, ஊரணியில் இருந்து மண் எடுத்து வந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்கிறார்கள். அதன் பிறகு, ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். செவ்வாய்க்கிழமைகளில் கூட, மேடையில் உள்ள பீடத்திற்குத்தான் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும். பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மனுக்கும் சிறப்பு ஆராதனைகளும் அர்ச்சனைகளும் உண்டு.

இந்தக் கோவில் தேவகோட்டை நகரத்தார்களின் 40 பிரிவுகளைச் சேர்ந்த 130 புளிகளுக்குச் சொந்தமானது. கோவிலின் நிர்வாகம் 5 அறங்காவலர்களால் 2 வருட காலத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு அம்மனுக்கு கழுத்துரு (திருமாங்கல்யம்) சார்த்தும் வேண்டுதல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் இந்த வேண்டுதலை நிறைவேற்ற, அலுவலகத்தில் பணம் செலுத்தி கழுத்துருவை பெற்று அம்மனுக்கு அணிவித்து ஆராதிக்கிறார்கள்.

தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில் மேடை மிகவும் விசேஷமானது. கர்ப்பகிரகத்தில் எப்போதும் மேடை மட்டுமே இருக்கும். இந்த திருவிழாவின் போதுதான் அம்மன் ஊருக்குள் பிரவேசித்து 15 நாட்கள் தங்கி இருப்பார்கள். தேவகோட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் இந்த சக்தி மிக்க அம்மன், இக்காலகட்டத்தில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழா நாட்களில், ஆற்றில் இருந்து குடங்களில் நீர் எடுத்து, ஆற்றங்கரைக் கோவிலில் வைத்து, தென்னம் பாளையை அதில் இட்டு அம்மனை ஆவாகனம் செய்து இங்கு கொண்டு வந்து வைப்பார்கள். அம்மனுக்கு நேரில் வெளியில் அமைந்திருக்கும் மேடைக்கு பால், மஞ்சள், குங்குமம் மற்றும் பல்வேறு மங்கலப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும்.

ஊரின் வெளியே ஆற்றங்கரையில் அம்மனின் பழங்கால கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்படும். நினைத்ததை முடித்துக் கொடுக்கும் அம்மனாக இவர் விளங்குகிறார். இங்கு வீடு, விமானம், கால், கை, கண்மலர், உடம்பு, பாம்பு போன்ற பல்வேறு வேண்டுதல் பொருட்கள் அர்ச்சனை டிக்கெட் கொடுக்கும் இடத்தில் கிடைக்கும். பக்தர்கள் பணம் கட்டி இந்த பொருட்களை வாங்கி, தட்டில் வைத்து அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யும்போது, அதை அம்மனிடம் வைத்து பூஜை செய்து தருவார்கள். பின்னர் அப்பொருளை திரும்பப் பெற்று, நம் வேண்டுதலுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் வைத்து வழிபட, அடுத்த ஆண்டுக்குள் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

இந்த அம்மனை இந்து மதத்தினர் மட்டுமல்லாமல், வேறு மதத்தினரும் நாடி வருகிறார்கள். ஊரின் காவல் தெய்வம் என்பதாலும், அவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதாலும், அம்மனின் சக்தியை உணர்ந்ததாலும் மக்கள் ஒற்றுமையாக வழிபடுகின்றனர். திருவிழா முடியும் வரை, இந்து மதத்தினர் மட்டுமல்லாமல் மற்ற மதத்தினரும் அசைவம் சமைப்பதில்லை. இந்து மதத்தினர் சமையலில் கடுகுகூட தாளிப்பதில்லை. மேலும், 15 நாட்களுக்கு மக்கள் உணவுப் பொருட்களை வறுக்க மாட்டார்கள். இது அம்மனின் வெப்பத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. விழா முடிந்ததும், அலங்கரிக்கப்பட்ட அம்மன், கோயில் குளத்தில் மூழ்கி வெப்பத்தைக் குறைப்பதாக ஐதீகம்.

பொதுவாக அம்மன் கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவது வழக்கம். ஆனால் தேவகோட்டை கோட்டை அம்மன் வழிபாடு மிகவும் வித்தியாசமானது. இங்கு யாரும் எந்த பலியையும் கொடுப்பதில்லை. மேலும், விழா நடக்கும் நாட்களில் தேவகோட்டை நகருக்குள் அனைத்து கோழி, ஆடு இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். தேவகோட்டை எல்லையான ஆற்றுப்பாலத்தைக் கடந்த பின்னரே இறைச்சிக் கடைகள் செயல்படும். இந்த 15 நாட்களிலும் நகருக்குள் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருப்பது மிகவும் வித்தியாசமான மரபாகும். வேறு எந்த ஊரிலும் இது போன்ற நிகழ்வு இல்லை. எனவே, பக்தர்கள் மட்டுமல்லாமல், ஊர் மக்களும் கோட்டை அம்மனை ஒற்றுமையுடன் வழிபட்டு வருகின்றனர். இறைச்சிக் கடை வைத்திருப்பவர்கள் பலர் வேறு மதத்தினராக இருந்தாலும், அனைவரும் இந்த மரபைக் கடைப்பிடிப்பது பாராட்டுக்குரியது. தேவகோட்டை மாநகரில் வருடா வருடம் விமரிசையாக நடைபெறும் கோட்டை அம்மன் கோவில் ஆடித்திருவிழா இன்று தொடங்கி 15 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Adi ThiruvizhaDevakottaiKottai AmmanTamil Nadu FestivalsTemple Festivalsஆடித் திருவிழாகோட்டை அம்மன்தேவகோட்டை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது ஜீவாவின் ‘தகப்பன்’ படப்பிடிப்பு தொடங்கியது
Next Article சீனாவின் பீஜிங் நகரத்தின் அடையாளச் சின்னங்கள் சீன இளைஞர்கள் மத்தியில் பீஜிங் மீது புறக்கணிப்பு மனப்பான்மை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்: எம்.எல்.ஏ.க்களுக்கு 2 நாள் பயிற்சி

சென்னை கலைவாணர் அரங்கில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி முகாம் இன்று முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் பேரவை நடவடிக்கைகள், சட்டங்கள் இயற்றும்…

1 Min Read
தமிழ்நாடு

ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் ராஜ்பவன் பகுதியில் மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று உலா வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய பகுதியில்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?