MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முகமது சிராஜ் ஏன் அணியில் இல்லை? வாசிம் ஜாபர் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முகமது சிராஜ் ஏன் அணியில் இல்லை? வாசிம் ஜாபர் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - முகமது சிராஜ் ஏன் அணியில் இல்லை? வாசிம் ஜாபர் கேள்வி

விளையாட்டு

முகமது சிராஜ் ஏன் அணியில் இல்லை? வாசிம் ஜாபர் கேள்வி

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 20, 2026 5:53 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்
SHARE

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை வரை, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரே இந்திய அணியின் புதிய பந்து வீச்சாளர்களாக இருக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த போட்டியில் 388 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி கடுமையாக போராடிய போதிலும், 360/7 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது. இந்த சூழலில், தனது யூடியூப் சேனலில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய ஜாபர், ஒருநாள் கிரிக்கெட் அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்படாதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

'முகமது சிராஜ் ஏன் அணியில் இல்லை என்பது எனக்கு புரியவில்லை. உலகக் கோப்பைக்கு முன்னதாக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் பெரும்பாலான போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இதுதான் நமது முதன்மையான பந்துவீச்சு கூட்டணியாக இருக்க வேண்டும். எனது கணிப்பில், சிராஜும் பும்ராவும் புதிய பந்தில் பந்துவீச்சைத் தொடங்க வேண்டும்' என்று வாசிம் ஜாபர் கூறினார்.

'டி20 அல்லது ஒருநாள் போட்டிகள் எதுவாக இருந்தாலும், பும்ரா விளையாடாத போது நமது பந்துவீச்சு மிகவும் அனுபவமற்றதாக மாறிவிடுகிறது. சிராஜ் ஏன் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நிச்சயம் உலகக் கோப்பை திட்டங்களில் ஒரு பகுதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமையான பந்துவீச்சாளர் மற்றும் அணிக்காக தனது முழு பங்களிப்பையும் வழங்குபவர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிராஜ் இதுவரை 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25.32 சராசரி, 29.6 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 5.13 எகானமியுடன் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 6/21 ஆகும். இந்த புள்ளிவிவரங்கள் அவரது திறமையை தெளிவாக காட்டுகின்றன.

மற்றொரு வீரரான பிரார் ஓரளவுக்கு சிறப்பாக செயல்படுவதாகவே நான் கருதினேன். அவர் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருந்தாலும், அவரிடம் உள்ள திறமையை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார், சரியான லெந்த்தில் வீசினால் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நேற்றைய போட்டியில் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும், ஒட்டுமொத்தமாக இந்த பந்துவீச்சு வரிசையில் பல கேள்விகள் உள்ளன.

அர்ஷ்தீப் அல்லது பிரின்ஸ் யாதவ் பற்றி பேசினாலும், குறிப்பாக டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும், 50 ஓவர் கிரிக்கெட்டில் அவர்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்றே நான் கூறுவேன். இந்த பவுலிங்கை வைத்து 2027 உலககோப்பையை எல்லாம் இந்திய அணியால் வெல்ல முடியாது என்று முன்னாள் வீரர் புஜாரா சாடியுள்ளார்.

இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேயில் ஜூலை 23 அன்று தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Jasprit BumrahMohammed Sirajஇங்கிலாந்துஇந்திய கிரிக்கெட் அணிஉலகக் கோப்பைஒருநாள் தொடர்முகமது சிராஜ்வாசிம் ஜாபர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வீட்டிற்குள் இயற்கை வெளிச்சம் படும் காட்சி வீட்டிற்குள் இயற்கை வெளிச்சம்: மனநிலையை மேம்படுத்தும் எளிய ஹேக்
Next Article தமிழக முதல்வர் விஜய் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு: ராகுலிடம் பேசி தீர்வு காணுங்கள் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
விளையாட்டு

IND vs ENG: இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சிக்கல் – கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை

இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவது எதிரணிக்கு சாதகமாக அமையும் என கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

2 Min Read
லார்ட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே
விளையாட்டு

ரித்திகா வருகை.. ரோஹித் சர்மாவின் ஓய்வு உறுதியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே லார்ட்ஸ் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். இது அவரது கடைசிப் போட்டியா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

2 Min Read
விளையாட்டு

ICC ஒருநாள் தரவரிசை பட்டியல்.. இந்தியா முதலிடம்.. 2027 உலககோப்பைக்கு தகுதி பெற கடும் போட்டி

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் தனது முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. சமீபத்திய ஆண்டு வெளியான புதிய தரவரிசையில், நியூசிலாந்து மற்றும்…

2 Min Read
விளையாட்டு

சச்சின் கடவுள், வைபவ் கடவுளின் பிள்ளை: ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சிப் பேட்டி

15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சச்சினுடன் ஒப்பிடக்கூடாது என்றும், சச்சின் கடவுள் என்றால் வைபவ் கடவுளின் பிள்ளை என்றும் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?