MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்: அன்புமணி வரவேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்: அன்புமணி வரவேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்: அன்புமணி வரவேற்பு

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்: அன்புமணி வரவேற்பு

Admin
Last updated: மே 10, 2026 3:24 மணி
Admin
Share
SHARE

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் இன்றைய தலையாயத் தேவைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டியதும் தான். அவற்றுக்கு வகை செய்யும் திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஒழிக்கப்பட வேண்டிய போதைப் பொருள்கள் கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் மட்டுமல்ல… அரசின் சார்பில் விற்பனை செய்யப்படும் மது வகைகளும் தான். மதுவால்தான் ஆண்டுக்கு 20 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன; லட்சக்கணக்கான குடும்பங்கள் தலைவர்களை இழந்து நடுத்தெருவுக்கு வருகின்றன. எனவே டாஸ்மாக் மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் இன்றைய முக்கியத் தேவைகளில் இன்னொன்று சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்துவதாகும். சமூகநீதியில் தமிழகத்தை தனித்துவப்படுத்தி காட்டுவது 69% இட ஒதுக்கீடு தான். ஆனால் உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதிக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தடுக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

ஆளும் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதியே, ’’ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மேற்கொள்ளப்படும்” என்பது தான். அந்த வகையில் சமூகநீதியைக் காப்பதில் ஆளும் த.வெ.க.வும் உடன்படுகிறது.

எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தவும், அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது, உரிய அளவில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: சிஎஸ்கே அணிக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. இன்றும் தோனியும் கிடையாது
Next Article முதலமைச்சராக பதவி ஏற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள்
தமிழ்நாடு

ரயில் ஒன் செயலி: பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டண சலுகை நீட்டிப்பு

ரயில் ஒன் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு 3% கட்டணச் சலுகை 2027 மார்ச் வரை நீட்டிப்பு. 3% கேஷ்பேக் சலுகை 2028 ஆகஸ்ட் வரை…

2 Min Read
தமிழகத்தில் மழை பெய்யும் காட்சி
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை அதிகமாக…

1 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் பேசுகிறார்
தமிழ்நாடு

மக்கள் வரிப்பணம்: எ.வ.வேலுவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

சட்டசபையில் மேஜை, மைக், இருக்கைகள் திமுக ஆட்சியில் செய்ததாக எ.வ.வேலு பேசியதற்கு, அவை மக்கள் வரிப்பணத்தில் செய்தவை என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி தந்துள்ளார். காமராஜர் காலை…

1 Min Read
கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 'பான் அம்' விமானத்தின் இடிபாடுகள்
தமிழ்நாடு

74 ஆண்டுகால மர்மம் முடிந்தது: ‘பான் அம்’ விமானத்தின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு!

74 ஆண்டுகளுக்குப் பிறகு, 1952ல் கடலில் மூழ்கி 52 உயிர்களைப் பலி கொண்ட 'பான் அம்' விமானத்தின் இடிபாடுகள் 2000 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது விமானப்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?