MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘நல்ல படம் பண்​றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனா…’ – இயக்குநர் சசி நேர்​காணல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘நல்ல படம் பண்​றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனா…’ – இயக்குநர் சசி நேர்​காணல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘நல்ல படம் பண்​றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனா…’ – இயக்குநர் சசி நேர்​காணல்

சினிமா

‘நல்ல படம் பண்​றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனா…’ – இயக்குநர் சசி நேர்​காணல்

Admin
Last updated: மே 10, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

தனது பெரும்​பான்​மை​யான படங்​களில் பெண்​களின் பிரச்சினைகளை, உணர்​வு​களை மென்​மை​யாகப் பேசி​யிருக்​கிற சசி, இப்​போது ‘நூறு சாமி’​யுடன் வந்​திருக்​கிறார். விஜய் ஆண்​டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் என பலர் நடித்​திருக்​கும் இந்​தப் படத்​தில், இசை அமைப்​பாளர் பாலாஜி ராம், எடிட்​டர் ஹரிஷ் யுவ​ராஜ், ஒளிப்​ப​தி​வாளர் தர்​ஷன் ஆகிய 3 புது​முகங்​களை அறி​முகப்​படுத்தி இருக்​கிறார். விஜய் ஆண்​டனி தயாரித்​திருக்​கும் இந்​தப்​படம் விரை​வில் வெளி​யாக இருக்​கும் நிலை​யில், இயக்​குநர் சசி​யிடம் பேசினோம்.

‘நூறு சாமி’ உண்​மைக் கதைன்னு சொல்லி இருக்​கீங்​களே?

ஆமா. கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​துல இருக்​கிற ஒரு கிராமத்​துல நடந்த கதை. ஒரு ரியாலிட்டி ஷோவுல ஒரு பெண்​ணுக்கு நடந்த சம்​பவத்​தைப் பார்த்​ததும் அது என்னை பாதிச்​சது. அந்த சம்பவத்தை அந்த பெண்​ணோட மகனே புத்​தகமா எழுதியிருக்கார்னு தெரிஞ்​சதும் அதை படிச்​சுப் பார்த்​துட்டு அவரை கூப்​பிட்​டுப் பேசினேன். அம்மா பற்றி ரத்​த​மும் சதையுமான ஒரு வாழ்க்கை கிடைச்​சது. அது​தான் ‘நூறு சாமி’.

‘பிச்​சைக்​காரன்’ல நீங்க காட்​டிய அம்​மாவுக்​கும் ‘நூறு சாமி’ காண்பிக்​கப் போற அம்​மாவுக்​கும் என்ன வித்​தி​யாசம்?

‘பிச்​சைக்​காரன்’ல அம்​மாவை, மகன் தெய்​வ​மாகப் பார்த்​தான். ‘அம்மா ஒரு தெய்​வம், அவங்​களை எப்​படி மிஸ் பண்​ணுவேன்​’னு நினைக்​கிற மகன், அவங்​களுக்கு உடல் நிலை சரி​யில்​லாம போனதும் யாரும் பண்​ணாத ஒரு விஷ​யத்தை பண்​ணி​னான். ஆனா, இந்​தப் படத்​துல அம்​மாவை அவன் தெய்​வமா பார்க்​கலை. மனுஷி​யாகத்​தான் பார்க்​கிறான்.

‘கட​வுள், தெய்​வம், நூறு சாமிலாம் கிடை​யாது. நீ மனுஷி​தான்​’னு அம்​மாவை கனிவா பார்க்​கிறான். அப்​படி அம்​மாவைப் பார்க்​கிற அந்த அம்​மாவுக்​காக மகன் பண்​ணின விஷய​மும் எனக்கு புதுசா தெரிஞ்​சது. புதுசுங்​கறதை விட, ஓர் அழகான வாழ்க்​கையை அது காட்​டிச்​சு. அது​தான் இந்​தப் படம். ‘பிச்​சைக்​காரன்’ அம்​மாவை விட இந்த அம்மா வேற பரி​மாணத்​துல இருப்​பாங்க.

இந்​தப் படத்​தோட காட்​சிகளை பார்த்​துட்டு சில இயக்​குநர்​கள் நெகிழ்ச்​சியா பதிவு போட்​டிருந்தாங்​க…

நானும் பார்த்​தேன். எனக்கு தனிப்​பட்ட முறை​யில பிடிச்ச கதைன்னா, நான் இயக்​கிய ‘பூ’-வை சொல்​வேன். அதே மாதிரி இந்தப்​படத்​துல​யும் அதி​க​மான வாழ்க்கை இருக்​கு. அதாவது ‘பூ’ மாதிரி ஒரு கதையை, ‘பிச்​சைக்​காரன்’ மாதிரி மக்​களுக்​குப் பிடிச்ச முறை​யில சொல்​லணும்னு ரொம்ப மெனக்கெட்டிருக்கோம். அதுக்​கான பலன்​தான் அந்​தப் பாராட்டுன்னு நினைக்​கிறேன். பார்த்​தவங்க எல்​லோருமே ரொம்ப சுவாரஸியமா இருக்​கு, எப்​படி இவ்​வளவு ‘டெப்​தா’ கதை சொல்​றீங்​கன்னு கேட்​கிறாங்க. இங்க சக்​சஸ்​புல்​லான படத்தை பண்​றது கொஞ்​சம் கஷ்டப்பட்​டாலும் ஈஸி​தான். நல்ல படம் பண்றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனா, ஒரு நல்ல படத்தை சக்​சஸ் புல்லா பண்​றது ரொம்ப கஷ்டம்.

விஜய் ஆண்​டனியோட உங்​களுக்கு 2-வது படம். கிராமத்து கதாபாத்​திரத்​துக்கு எப்​படி பொருந்​துறார்?

இதுல கரும்பு வெட்​டுறவரா விஜய் ஆண்​டனி நடிச்​சிருக்​கார். இந்தக் கதை​யில சுவாசி​கா​வின் கேரக்​டரோட ஒப்​பிடும்​போது அவருக்​கான ‘ஸ்​கிரீன் ஸ்பேஸ்’ குறைவு​தான். அதனாலயே அவர்கிட்ட இந்​தக் கதையை சொல்​லலா​மா, வேண்​டா​மான்னு இருந்​தேன். அவர், ‘எனக்கு கதை இருக்​கு​மா?’ன்னு கேட்​கும்​போது, ‘இந்​தக் கதை​தான் இருக்​கு’ன்னு சொன்​னேன். கேட்​டது​மே, ‘பிச்சைக்​காரன்’ கதையை கேட்​டுட்டு எப்​படி ஃபீல் பண்ணினாரோ, அதே மாதிரி கண்​ணீர் விட்​டார். உடனடி​யா, ‘என்னோட பேனர்ல இன்னொரு நல்ல படம் வரணும்​’னு சொல்​லிட்டு நடிக்​கிறேன்​னார். அவர் தயாரிப்​புல வர்ற நல்ல படமா, கால​காலத்​துக்​கும் இது நிற்கும். படம் பார்த்​துட்டு வரும்​போது நாலு, அஞ்சு விஷ​யங்​களை பெருசா பேசு​வாங்​கன்னு நம்பறேன். அதுல ஒண்​ணு, விஜய் ஆண்டனி நடிப்​பு. அதே போல சுவாசிகாவோட நடிப்​பும் பேசப்படும். அவங்க கேரக்​டருக்கு எனக்கு வேற எந்த ஆப்​ஷனும் இல்​லை. படத்​துல ஒரு வசனமே வரும், ‘இப்​படி நடிக்​கிறியே நீ சாவித்​ரி​யா, சிவாஜி​யா?’ன்​னு. அது உண்​மை​தான். படம் முடிஞ்​சதும் நானே நினைச்​சேன் சுவாசி​கா, சாவித்​திரி​தான்​னு.

மெசேஜ் அப்​படின்னு சொல்ல முடி​யாது. இந்​தப் படம் பார்த்​துட்டு வெளிய வர்ற ஒவ்​வொருத்​தரும், ‘நான் ஏன் எங்க சித்​திய அப்​படி விட்​டுட்​டேன், எங்க பெரி​யம்​மாவை ஏன் இப்​படி கண்​டுக்​காம போயிட்​டேன், இந்​தப்​படத்​துல வர்ற பையன் மாதிரி, நாம ஏன் பண்​ணக் கூடாது?’ன்னு நினைப்​பாங்க. ஒவ்​வொருத்​தரும் தங்களோட வாழ்க்​கை​யில இருந்தோ அல்​லது சொந்​தத்​துக்​குள்ள இருந்தோ ஒருத்​தர் வாழ்க்​கையை பார்த்த உணர்வை இந்​தப் படம் கொடுக்​கும். படம் பார்க்கிற எல்​லோருமே ஒரு கேள்​வியோட வருவாங்க. இது, ‘பூ’​வும் ‘பிச்​சைக்​காரனு’ம் கலந்த படம். நான் நினைச்ச உயரத்​துக்கு இந்​தப் படம் போகலை​னாலும் இந்த வருடத்தோட மிகப்​பெரிய பேசுபொருளா இருக்​கும்.

‘பூ’ படத்துக்குப் பிறகு நாவல்களை, சிறுகதைகளை அதி​கம் படமா பண்​ணுவீங்​கன்னு எதிர்​பார்ப்பு இருந்​துச்​சு…

உண்​மை​தான். இந்​தக் கதையை கூட ஒரு புத்​தகத்​துல இருந்​து​தான் எடுத்​தேன். இது ஒரு வாழ்க்​கைக் கதை, அதை அனு​மதி வாங்​கி​ எடுக்​கறேன். சிறுகதைகள்ல இருந்​தும் நாவல்ல இருந்​தும் கதைகளை எடுக்​கும்​போதும் அதுல உயிர் இருக்​கும். அதை​தான் நானுமே விரும்​பறேன்.

பெரிய ஹீரோக்​களை வச்சு படம் பண்​றதை வேணும்னே தவிர்க்கிறீங்​களா?

2008-ல எழுத்​தாளர் மேலாண்மை பொன்​னு​சாமிகிட்ட பேசிட்டிருக்கும்​போது, ‘நான் எப்​ப​வும் கதை​யாகத்​தான் எதை​யும் யோசிப்​பேனே தவிர, ஹீரோ​யிசம் அதுக்குள்ள இருக்​கணும்னு நினைக்க மாட்​டேன்​’னு சொன்​னேன். அவர் சொன்​னார், “ஹீரோயிசம் தப்பான விஷ​யம் இல்​லை. எது ஹீரோ​யிசம் அப்படிங்​கறது​தான் முக்​கி​யம். காந்​தியை ரயில்ல இருந்து தள்​ளி​விடும்​போது, இதுக்கு ஒரு முடிவு கட்​ட​ணும்னு அவர் எந்​திச்சு நின்னார்ல, அது​தான் காந்தியின் ஹீரோ​யிசம். நீங்க எதை ஹீரோ​யிச​மாக தேர்ந்​தெடுக்​கிறீங்​களோ அதுல​தான் தப்​பு, ரைட்டுன்னு இருக்கு”ன்னார். அது இப்​ப​வும் என் மனசுக்​குள்ள இருக்​கு. அடுத்து ஒரு ஹீரோ கதையை​தான் தேடிட்டு இருக்​கேன். அடுத்த படத்​துல ஹீரோ​யிசத்​தோட​தான் வரு​வேன்.

சமீபத்​துல வர்ற ‘மாடர்ன் டே’ காதல் படங்​களை கவனிக்கிறீங்களா?

கண்​டிப்​பா. ‘வித் லவ்’ படம் எனக்கு பிடிச்​சிருந்​தது. ‘சிறை’​யும் நல்லா இருந்​தது. நான் குறும்​படங்​களை​யும் அதி​கமா பார்ப்​பேன். அதுல இன்​றைய இளைஞர்​கள் கையாள்ற உத்​தி​களை கத்துக்கறதுக்கு நிறைய இருக்​கு. ‘யூத்​’களுக்கு என்ன சொல்ல விரும்​பறீங்​க?ன்னு யாராவது கேட்​டா, ‘அவங்​களை சொல்ல சொல்​லுங்க, அவங்​ககிட்ட இருந்து நிறைய கத்​துக்க வேண்டியிருக்கு’னு சொல்​வேன்​.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கடகம்: இன்றைய ராசிபலன் – 10 மே 2026
Next Article மிதுனம்- வார ராசிபலன் 10.5.2026 முதல் 16.5.2026 வரை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

கரு.பழனியப்பன் பட டைட்டிலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படமான ‘குக்கர்’ படத்தின் டைட்டிலை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 Min Read
சினிமா

அதிகாலை ஒளி: சினிமாவின் மறைக்கப்பட்ட அழகு ரகசியம்

சினிமாவில், இருளுக்கும் ஒளிக்கும் இடையிலான நடனம் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்துகிறது. இதில், அதிகாலை வெளிச்சம் என்பது மிகவும் மென்மையான, உணர்ச்சிகரமான மற்றும் சவாலான ஒன்றாகும். சூரியன் உதிப்பதற்கு…

2 Min Read
நடிகை பரினீதி சோப்ரா மற்றும் கத்ரீனா கைஃப்
சினிமா

கத்ரீனா கைஃப்-ஐ பார்த்து பயம்: பரினீதி சோப்ராவின் பழைய பேட்டி வைரல்

பரினீதி சோப்ரா, கத்ரீனா கைஃப்-ஐ தனது உடற்பயிற்சிக்கு முன்மாதிரியாகக் கருதுவதாகக் கூறிய பழைய 'காபி வித் கரண்' பேட்டி சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

2 Min Read
சினிமா

கேள்வி கேட்பதிலும் கண்ணியம் தேவை: மாளவிகா மோகனன் வலியுறுத்தல்

நடிகை மாளவிகா மோகனன், பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட தேவையற்ற கேள்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கண்ணியமான உரையாடலை அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?