MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை
விளையாட்டு

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை

Admin
Last updated: May 10, 2026 6:28 am
Admin
Share
SHARE

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி புதிய சாதனைகளை படைத்து வரும் நிலையில், மறுபுறம் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி பல மோசமான சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சில் யாருமே விரும்பாத மோசமான சாதனையை படைத்து உள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மே 9ம் தேதி நடைபெற்ற 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், அவரது இந்த முடிவு ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ராஜஸ்தான் பந்துவீச்சை எந்தவித கருணையும் இன்றி நாலாபுறமும் சிதறடித்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 55 ரன்களும், சுப்மன் கில் 84 ரன்களும் குவித்து அபாரமான அடித்தளத்தை அமைத்தனர். பேட்ஸ்மேன்களின் இந்த அதிரடியால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது.

இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக் கொடுத்ததன் மூலம் ராஜஸ்தான் அணி ஐபிஎல் வரலாற்றில் ஒரு படுமோசமான சாதனையை செய்தது. அதாவது, பல ஐபிஎல் சீசன்களில் 7 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்த முதல் அணி என்ற பரிதாப நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு அணியும் பல சீசன்களில் தொடர்ச்சியாக 7 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கியதில்லை.

ராஜஸ்தான் அணி கடந்த 2025ம் ஆண்டு சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 7 முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது. தற்போது நடப்பு 2026 சீசனிலும் இதுவரை விளையாடிய 11 போட்டிகளிலேயே 7 முறை 200 ரன்களுக்கு மேல் வாரி வழங்கி மோசமான பந்துவீச்சுக்கு உதாரணமாக திகழ்கிறது. நடப்பு 2026 சீசனில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் தலா 6 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்துள்ளன.

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கிய மோசமான உலக சாதனை பாகிஸ்தானின் சதர்ன் பஞ்சாப் அணியிடம் உள்ளது. அந்த அணி 2020ம் ஆண்டு நடைபெற்ற தேசிய டி20 கோப்பை தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 8 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்து முதலிடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரிஜேஷ் ஷர்மா 4 ஓவர்களில் 47 ரன்களை வழங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யாஷ் ராஜ் புஞ்சா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். பலமான அணியாக கருதப்படும் ராஜஸ்தான், பந்துவீச்சில் இப்படி தொடர்ச்சியாக சொதப்புவது அதன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை: 1.31 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் எதிர்பார்ப்பு
Next Article வேற்றுகிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்ட டிரம்ப்.. என்ன இருக்கிறது?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி

கிசா: எகிப்து நாட்டில் உள்ள கிசா நகரில் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில்…

1 Min Read
விளையாட்டு

“ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” – ஜேக்கப் பெத்தெல்

ராய்ப்பூர்: ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது என அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.…

1 Min Read
விளையாட்டு

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் பெயர்.. என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

டாக்கா: கிரிக்கெட் ஒளிபரப்பு வரலாற்றில் பல தவறுகள் இருந்தாலும், பாகிஸ்தான் - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்காவில் நடந்த…

1 Min Read
விளையாட்டு

மும்பை அணிக்கு எதிராக பெங்களுரு பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 5 முறை சாம்பிய னான…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?