தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி 'வீ தி லீடர்ஸ்' என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த புதிய அமைப்பின் முதல் மாநாடு வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
புதிய அமைப்பைத் தோற்றுவித்த பிறகு அண்ணாமலை முன்னெடுக்கும் முதல் மாநாடு என்பதால், அவரது அரசியல் நகர்வுகளில் இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை பா.ஜ.க-வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி 'வீ தி லீடர்ஸ்' அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
இந்த மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 'வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் தங்களது ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தங்களது ஆதரவாளர்களுடன் இந்த புதிய இயக்கத்தில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த மாநாடு அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.