புத்தாண்டு பிறந்து சில நாட்களே ஆன நிலையில், தங்கத்தின் விலையில் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை, அடுத்தடுத்த மாதங்களிலும் கடுமையாக உயர்ந்து, ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது. இந்த ஆண்டு பாதிக்குள் தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக தங்கத்தின் விலையில் எதிர்பாராத சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4 ஆயிரம் டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த இரு தினங்களாக உயர்ந்திருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் முந்தைய நாளின் விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைவு நடுத்தர மற்றும் ஏழை மக்களை சற்று ஆறுதல் அடையச் செய்துள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் பிற காரணங்களால் தங்கத்தின் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.