இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக Kinetic நிறுவனம் தனது Kinetic Green Flex இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.
Kinetic Green Flex இ-ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரத்து 489 ஆகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 72 கிலோமீட்டர் ஆகும். ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். இதன் இருக்கை உயரம் 485 மி.மீட்டர் ஆகும்.
இந்த இ-ஸ்கூட்டர் கருப்பு, சிவப்பு, நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. 160 என்எம் டார்க் இழுவைத்திறன் கொண்டது. நார்மல், எகோ மற்றும் பவர் என மூன்று விதமான மோட்களில் இயக்கலாம். இதில் பிஎல்டிசி மோட்டார் மற்றும் நிரந்தரமாக பொருத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ரேட்டிங் கொண்டது. 72 வாட் 10 ஏஎச் அவுட்புட் கொண்ட போர்ட்டபிள் சார்ஜர் டைப் இதில் உள்ளது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் முன்பக்கம், பின்பக்கம் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் 12 இன்ச் சக்கரங்கள் உள்ளன.
மேலும், ட்யூப்லெஸ் டயர்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன், மற்றும் பின்பக்கத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் வசதி உள்ளது. ஸ்கூட்டரின் எடை 100 கிலோ ஆகும். 190 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி கொண்டது. 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. பேட்டரிக்கு 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டியும், மோட்டாருக்கு 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டியும் அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப்மீட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர், செல்ஃப் ஸ்டார்ட், ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், எல்இடி முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள், ஹாலோஜன் விளக்குகள் மற்றும் பில்லியன் சீட் இருக்கை போன்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.